முஸ்லீம்களாலும் பெரிதும் மதிக்கப்படுபவர் போப்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 22: போப் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, போப்பின் மிகுந்த இரக்கம் மற்றும் மனிதாபிமானத்திற்காக அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் பதிவிட்டுள்ளார்.

வாடிகனில் தனது ஆரம்ப நாட்களில் போப்பைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், மதங்களுக்கு இடையேயான புரிதல், ஒதுக்கப்பட்டவர்களை ஆதரிப்பது மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றிற்கான போப் பிரான்சிஸின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பாராட்டியதாகவும் அன்வார் கூறினார்.

போப் எப்போதும் அமைதிக்காக வாதிட்டதாகவும், நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே பாலங்களை கட்டுவதற்கான அவரது தொடர்ச்சியான முயற்சிகளுக்காக முஸ்லிம்களால் கூட பெரிதும் மதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

காசாவில் உள்ள  துன்பங்கள் குறித்து அவர் தார்மீக தெளிவுடன் பேசினார், வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்கள் எங்கிருந்தாலும், நாம் அதே இரக்கத்தைக் காட்ட வேண்டும் என்பதை உலகிற்கு நினைவூட்டினார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் கண்ணியத்தையும் அவர் பாதுகாத்தார். சர்வதேச சமூகம் அவர்களின் துயரத்திற்கு மனிதநேயம் மற்றும் மனசாட்சியுடன் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உலகின் தெற்கிலிருந்து வந்த முதல் போப்பாக மட்டுமல்லாமல், கொந்தளிப்பான உலகில் இரக்கம், பணிவு மற்றும் நீதியின் தார்மீகக் குரலாகவும் அவர் நினைவுகூரப்படுவார் என்று அன்வார் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளர்.

அன்வார் தனது இரங்கலைப் புனித பீடத்திற்கும், மலேசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களுக்கும் தெரிவித்தார்.

ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ மார்ச் 2013 இல் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவராக ஆனார்.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒரு நாள் கழித்து, கடுமையான இரட்டை நிமோனியா தாக்குதலைத் தொடர்ந்து  அவரது மரணம் வாடிகனால் அறிவிக்கப்பட்டது!

Perdana Menteri Anwar Ibrahim merakamkan takziah atas kemangkatan Paus Fransiskus, menghargai sumbangannya dalam keamanan, kemanusiaan dan perpaduan antara agama serta menyeru masyarakat dunia agar mencontohi sifat belas kasihan beliau.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *