குறைந்தபட்ச ஊதிய உயர்வால் ரிங்கிட்டின் மதிப்பு குறையும்– மகாதீர்

- Shan Siva
- 19 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்ரல் 19: குறைந்தபட்ச ஊதிய உயர்வு, ரிங்கிட்டின் மதிப்பு குறைய வழிவகுக்கும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது பரிந்துரைத்துள்ளார். மேலும் இதுபோன்ற விஷயங்களில் அரசாங்கம் எச்சரிக்கையான அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இருப்பினும்,
அதிக ஊதியம் என்பது பொதுமக்கள் முன்பு
வாங்கக்கூடியதை விட சற்று அதிகமாக வாங்க முடியும் என்பதாகும். காலப்போக்கில்,
ஊதிய உயர்வு உற்பத்திச் செலவை அதிகரிக்கும்
என்பதால் வாழ்க்கைச் செலவு மீண்டும் உயரும்.
இப்போது நாம்
மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவோம். எனவே, ஊதியத்தில்
மற்றொரு அதிகரிப்புக்கான கோரிக்கை இருக்கும்.
இதற்கு ஒப்புக்
கொள்ளப்பட்டால் அதே விளைவு இருக்கும், புதிய ஊதியம் வாங்கும் சக்தியை அதிகரிக்காது, ஆனால் உற்பத்திச் செலவை அதிகரிக்கும் என்று மகாதீர் சுட்டிக்காட்டினார்.
வரலாற்றை
பின்னோக்கிப் பார்க்கும்போது “நான் 1930களில் சிறுவனாக இருந்தபோது, ஒரு சிறிய தட்டு மீ (நூடுல்ஸ்) வெறும் 3 லிருந்து
5 காசுகளுக்கு வாங்க முடிந்தது. இன்று நான் குறைந்தபட்சம் RM3-RM5 வெள்ளி செலுத்த
வேண்டும் இது ரிங்கிட்டின் மதிப்பில் 1,000% தேய்மானம் என்று விவரித்தார்.
மலேசியா
குறைந்தபட்ச ஊதியத்தை அடிக்கடி அதிகரித்து வருகிறது” என்று கூறிய மகாதீர், பிப்ரவரியில், ஊதியம் RM1,500 ஆக
உயர்த்தப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அரசாங்கம் குறைந்தபட்ச ஊதியத்தை RM200 அதிகரித்து RM1,700 ஆக உயர்த்தியது என்று சுட்டிக்காட்டினார்.
எனவே, நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்தோனேசிய ரூபாய் மற்றும் துருக்கிய லிராவைப் போலவே ரிங்கிட்டும் அதே கதியை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்!
Tun Dr. Mahathir Mohamad mengingatkan bahawa kenaikan gaji minimum boleh menyebabkan penyusutan nilai ringgit. Beliau menegaskan kerajaan perlu berhati-hati kerana gaji tinggi boleh meningkatkan kos pengeluaran dan akhirnya menyebabkan kos sara hidup terus meningkat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *