ஜித்ராவில் இருவர் சுட்டுக் கொலை! போலீஸார் அதிரடி நடவடிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 5: கெடா, ஜித்ராவில் இன்று போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (பிளஸ்) நுழைவுச் சாலையில் காலை 8.05 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது.

அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் சந்தேகத்திற்கிடமானதாகத் தோன்றிய நா வாகனத்தை அணுகி, வாகனத்தை நிறுத்துமாறு வாகனத்தில் இருந்தவர்களுக்கு உத்தரவிட்டதாக கெடா காவல்துறைத் தலைவர் ஃபைசோல் சாலே தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் பின்னர் போலீஸ் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, போலீஸார் துப்பாக்கிப் பிரயேகத்தை மேற்கொண்டதாக அவர் கூறினார்.

சந்தேக நபர்களின் வாகனத்தில், இரண்டு துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர் மற்றும் அரை தானியங்கி கைத்துப்பாக்கி, பல தோட்டாக்கள், ஒரு பாராங் மற்றும் குற்றச் செயல்களைச் செய்வதற்கான பிற கருவிகள் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்தனர் என்று அவர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

41 வயதான சந்தேக நபர்களில் ஒருவரின் பின்னணி சோதனையில், அவர் 40க்கும் மேற்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்கான பதிவு இருப்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த இருவரும் போதைப்பொருள் கடத்தல், கொள்ளை, தொழிற்சாலை உடைப்புகள் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளைகள் உட்பட நாடு முழுவதும் வன்முறை குற்றங்களைச் செய்யும் ஒரு பெரிய குழுவின் ஒரு பகுதியாக இருப்பதாக தாங்கள் நம்புவதாகவும் இந்த கும்பல் 2020 முதல் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இரண்டு சந்தேக நபர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அலோர் ஸ்டார் பகுதியில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கொலை முயற்சி குற்றவியல் சட்டத்தின் பிரிவு 307 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

இந்த சந்தேக நபர்கள் சிலாங்கூரில் உள்ள கிள்ளானில் உள்ள ஒரு குற்றவியல் குழுவுடன் தொடர்புடையவர்களா என்பதை  விசாரித்து வருகிறோம். இந்தக் குழுவில் 30 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Dua lelaki disyaki penjenayah maut dalam kejadian tembak-menembak dengan polis di Jitra, Kedah. Polis menemui senjata api dan barangan jenayah dalam kenderaan mereka. Salah seorang suspek terlibat lebih 40 kes jenayah sejak 2020, termasuk dadah dan rompakan.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *