இடைத்தேர்தல் முடிவுகள் நாளை இரவு 9 மணிக்கு அறிவிக்கப்படும்!

- Shan Siva
- 25 Apr, 2025
தாப்பா, ஏப்ரல் 25: ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி
இடைத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ முடிவுகள் நாளை இரவு 9 மணியளவில் அறிவிக்கப்படும்
என்று தேர்தல் ஆணைய செயலாளர் டத்தோ இக்மால்ருதீன் இஷாக் தெரிவித்தார்.
வாக்குப்பதிவு
மற்றும் வாக்கு எண்ணிக்கை செயல்முறைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் சீராக நடந்தால்
இது சாத்தியமாகும் என்று அவர் கூறினார். இருப்பினும் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள்
முன்னதாகவே கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று டேவான்
மெர்டேகாவில் உள்ள அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் ஆணைய
ஊழியர்களின் ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின்னர் இக்மால்ருதீன் செய்தியாளர்களிடம்
பேசினார்.
வாக்குப்பதிவு
செயல்பாட்டில் 19 வாக்குச் சாவடிகளில் நிறுத்தப்படும் போலீஸ் எஸ்கார்ட்கள் உட்பட
601 பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், பெயர் சரிபார்ப்பை எளிதாக்கவும், சுமூகமான வாக்களிப்பு
செயல்முறையை உறுதி செய்யவும் 31,281 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தங்கள் மை
கார்டைக் கொண்டு வருமாறு அவர் நினைவூட்டினார்.
மேலும், வாக்காளர்கள் எந்த அரசியல் கட்சியின் பெயர், சின்னம், படம் பொறித்த எந்த ஆடைகளையும் வாக்குச் சாவடிகளுக்கு அணிய வேண்டாம் என்றும்
அவர் நினைவூட்டினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு வாக்குச் சாவடிகளில் 500 காவல்துறையினரில் 93.4 சதவீதம் பேர் மற்றும் அவர்களது மனைவியர் வாக்களித்ததாகவும், தகுதியான வாக்காளர்களுக்கு 116 தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும் இக்மால்ருதீன் கூறினார்!
Tapah: Keputusan rasmi Pilihan Raya Kecil DUN Ayer Kuning dijangka diumumkan esok malam jam 9, kata Setiausaha Suruhanjaya Pilihan Raya, Datuk Ikmalrudin Ishak. Proses pengundian dijangka berjalan lancar tanpa sebarang gangguan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *