7 மாநிலங்களில் வெள்ளம்! 120,000 பேர் வெளியேற்றம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவம்பர் 30: நேற்றிரவு 106,505 ஆக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 120,000 ஆக உயர்ந்துள்ளதாகவும், ஏழு மாநிலங்களில் வெள்ள நிலைமை இன்று காலை மோசமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளந்தான் மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80,640 பேர் கிளந்தான் மாநிலத்தில் பாதிக்கபப்ட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்பது பெரிய ஆறுகள் அவற்றின் அபாய அளவைத் தாண்டிவிட்டதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

திரெங்கானுவில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். சுமார்  35,124 பேர் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கெடாவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,911 ஆக அதிகரித்துள்ளது.

22 தற்காலிக நிவாரண மையங்களில் 2,174 பேர் தஞ்சமடைந்துள்ளதாக நெகிரி செம்பிலான் தெரிவித்துள்ளது.

பெர்லிஸ் நான்கு நிவாரண மையங்களில் 149 குடும்பங்களைச் சேர்ந்த 520 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஜொகூரில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 425 ஆக அதிகரித்துள்ளது,

சிலாங்கூர் கிள்ளானில் 473 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பலி எண்ணிக்கை மூன்றாக நீடிக்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *