சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கே தடுமாறும் பாகிஸ்தான்!
- Muthu Kumar
- 08 Jun, 2024
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தோற்கடித்து அமெரிக்கா அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் அடுத்த போட்டியில் வலுவான இந்தியாவை எதிர்கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவதே கடினம் என்று முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் வேதனை தெரிவித்துள்ளார். அதனால் கோப்பையை வெல்வதைப் பற்றி பின்பு பார்க்கலாம் முதலில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று மானத்தைக் காப்பாற்றுங்கள் என்று அவர் பாகிஸ்தான் அணியை சாடியுள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பதற்றமான செயல்பாடு. வெற்றி தோல்வி என்பது விளையாட்டின் அங்கமாகும். ஆனால் நீங்கள் கடைசி பந்து வரை போராட வேண்டும். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மோசமான தோல்வியாகும். இங்கிருந்து பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கே தடுமாறும். ஏனெனில் அடுத்ததாக அவர்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாட வேண்டும்”
“அத்துடன் அயர்லாந்து, கனடா ஆகிய 2 நல்ல அணிகளுக்கு எதிராகவும் விளையாட வேண்டும். ஆரம்பத்திலேயே அமெரிக்கா விக்கெட்டுகளை எடுத்தது போட்டியின் திருப்பு முனையாக அமைந்தது. பாபர் – சடாப் ஆகியோரை தவிர்த்து மற்றவர்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. ஃபீல்டிங் சராசரிக்கும் குறைவாக இருந்தது. பாகிஸ்தான் சுமாரான கிரிக்கெட்டை விளையாடியது”
அமெரிக்காவுக்கு எதிராக விளையாடும் போது அனைத்து பாகிஸ்தான் ரசிகர்களும் கண்டிப்பாக வெல்வோம் என்று நம்பிக்கையுடன் இருந்திருப்பார்கள். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அமெரிக்கா அசத்தினார்கள். குறிப்பாக சூப்பர் ஓவரில் 19 ரன்கள் அடிப்பது 36 ரன்கள் அடிப்பதற்கு சமமாகும். வாழ்த்துக்கள் அமெரிக்கா” என்று கூறினார். இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் செல்ல 4 போட்டிகளில் குறைந்தது நல்ல ரன்ரேட்டுடன் கூடிய 2 பெரிய வெற்றிகளை பெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *