ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் மருத்துவரும் நோயாளியும் தாதியரும் காயம்!

- Sangeetha K Loganathan
- 23 Mar, 2025
மார்ச் 23,
கட்டுப்பாட்டை இழந்த விரைவு ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் ஆம்புலன்ஸிலிருந்த ஒரு மருத்துவரும் 2 தாதியர்களும் ஒரு நோயாளியும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளானதாக மாராங் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sofian Redzuan தெரிவித்தார். நள்ளிரவு 12.30 மணிக்கு விபத்துக் குறித்தானத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மாராங் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sofian Redzuan தெரிவித்தார்.
கெமாமன் மருத்துவமனையிலிருந்து கோலா தெரெங்கானுவில் உள்ள சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்கு 21 வயது நோயாளியை ஏற்றிச் செல்லும் போது ஆம்புலன்ஸின் இடதுபுற டயர் வெடித்து ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆம்புலன்ஸில் இருந்த ஐவரும் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் மாராங் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sofian Redzuan தெரிவித்தார்.
Sebuah ambulans terbalik selepas tayar kiri meletup ketika membawa pesakit dari Hospital Kemaman ke Hospital Sultanah Nur Zahirah. Seorang doktor, dua jururawat, pesakit dan pemandu mengalami kecederaan ringan. Pihak berkuasa sedang menyiasat kejadian tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *