பமேலா லிங்கின் கணவர் கைது!

- Muthu Kumar
- 16 May, 2025
கோலாலம்பூர், மே 16-
கடந்த மாதம் முற்பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள பமேலா லிங் என்பவரின் கணவர் ஹா திங் சியூ நேற்று காலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தோமஸ் ஹா என்றும் அறியப்படும் சரவாக்கிய வர்த்தகரான அவர், புலன்விசாரணைக்கு உதவுவதற்காக கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி இசா தெரிவித்தார்.
ஆயினும், எதன் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.தோமஸ் ஹாவைக் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு போலீசார் செய்திருந்த விண்ணப்பத்தை நீதிமன்றமொன்று நிராகரித்தது என்றும் ருஸ்டி கூறினார்.
கடந்த மாதம் 9ஆம் தேதியன்று வாக்குமூலம் அளிப்பதற்காக புத்ராஜெயாவில் உள்ள மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் அடையாளம் தெரியாத நபர்களால் பமேலா லிங் (வயது 42) கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பாக அவரிடம் எம்ஏசிசி விசாரணை நடத்தி வந்த வேளையில் அவர் கடத்தப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் மற்றும் கள்ளப் பணப் பரிமாற்றக் குற்றங்கள் தொடர்பில் பமேலா லிங்கையும் தோமஸ் ஹாவையும் கடந்த மே மாதத்திலிருந்து எம்ஏசிசி விசாரிக்கத் தொடங்கியது.பமேலா லிங் தலைமறைவானதில் அவரின் கணவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று தேசியப் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.பமேலா லிங் கடத்தப்பட்டிருப்பது தொடர்பில் பிணைப் பணம் எதுவும் இதுவரை கோரப்படவில்லை என்று தெரிகிறது.
Suami Pamela Leong, Ha Ting Siew, ditahan polis di Kuala Lumpur bagi membantu siasatan kes kehilangan isterinya. Pamela dipercayai diculik semasa disiasat SPRM berkaitan pengubahan wang haram. Polis belum mendedahkan butiran lanjut siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *