sand fish என்று அழைக்கப்படும் மணல் மீன்கள்.
- Muthu Kumar
- 21 May, 2024
அல்ஜீரியாவின் மணல் பகுதிகளில் மீன்கள் நீந்துவது போல் மணல் வழியாக நகரும் திறன் காரணமாக உருவான பெயர்தான் sand fish என்று அழைக்கப்படும் மணல் மீன்கள். இதன் தோல்கள் பொதுவாக 20 செமீ அதாவது 8 இன்ச் நீளத்தில் இருக்கும்.இதன் வால் பகுதி குட்டையாக காணப்படும்.
பாலைவன மணல்களில் காணப்படும் வெப்பத்தை கையாள்வதில் இதன் தோல்கள் ஒரு தனித்துவமான திறனை கொண்டது. மணல் மீன்கள் மென்மையான மணலில் மூழ்கி செல்லக்கூடிய தன்மையை பெற்றவை. மேலும் அவை செல்லும் பொழுது மணலில் அதிர்வுகளை உருவாக்குகின்றன. அதன் தோல்களின் அமைப்பு உடல் அதிகமாக வெப்பமடைவதைத் தடுக்கவும், நெளிந்து, சுழிந்து மணலுக்குள் செல்லும் விதம் வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்கவும் உதவுகிறது.
இதன் குறுகலான உடல் மென்மையான, பளபளப்பான செதில்களால் மூடப்பட்டிருக்கும். Sand fish என்றழைக்கப்படும் மணல் மீன்கள் பார்ப்பதற்கு எண்ணெய் மினுமினுப்பது போன்ற தோற்றத்துடன் காணப்படும். அதன் கால்கள் குறுகிய மற்றும் உறுதியான நீண்ட, தட்டையான மண்வெட்டி போன்ற பாதங்களுடன் இருக்கும்.
மணல் மீன்கள் இனத்தின் நிறம் கவர்ச்சிகரமானதாக கருதப்படுகிறது, பழுப்பு-கருப்பு குறுக்கு பட்டைகள் கொண்ட மஞ்சள்-கேரமல் என ஒரு வகையான வண்ணங்களில் காணப்படும். இந்த மணல் மீன்களுக்கு மணி போன்ற கண்கள் இருப்பதனால், எளிதில் கண்களுக்குள் மணல் செல்லாமல் இருக்க உதவுகிறது. இதேபோல், அதன் மூக்கு மற்றும் நுரையீரலுக்குள் மணல் செல்லாமல் தடுக்க அதன் நாசி மிகவும் சிறியதாக காணப்படுகிறது.
அல்ஜீரியாவில் 13 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய புராணங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரமாக அங்கம் வகிக்கிறது. இன்றுவரை இப்பகுதியின் நாடோடி பழங்குடியினர் பாலைவனத்தின் ஆபத்துகளிலிருந்து தங்களைப் பாதுகாக்கும் ஒரு ஆசீர்வாதம் கொண்ட பிராணியாக இந்த மணல் மீன்களை நம்புகின்றனர். இந்த வகையான விலங்குகளை பெரும்பாலும் செல்லப்பிராணியாக வைத்திருப்பதை மிகவும் விரும்புகிறார்கள்.
Sand fish என்றழைக்கப்படும் மணல் மீன்கள் பாலைவன மணலில் முழுவதுமாக மூழ்கியிருந்தாலும் சுவாசிக்க முடிகிறது. அவை மணல் துகள்களுக்கு இடையே உள்ள காற்றின் இடைவெளி மூலம் சுவாசிக்கின்றன, மேலும் இதற்கு இருக்கும் விசேஷமாக சுவாசக்குழாய் மண் துகள்கள் நுரையீரலை அடைவதற்கு முன் தனது தும்மல் மூலம் வெளியேற்றப்படுகின்றன.sand fish அல்லது மணல் மீன்கள் என்று அழைக்கப்பட்டாலும் இவை தோற்றத்தில் பல்லிகளை போன்று இருப்பதினால் இவை பல்லி இனத்தைச் சார்ந்தவை என்று ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
66Bb4C96E165C.Site123.Me
This post iss actually a pleasant one it asseists new net users, who are wishing for blogging. https://66Bb4C96E165C.Site123.me/