ஆகஸ்ட் 1 முதல் வேப் விற்பனைக்குத் தடை! - பெர்லிஸ் மாநிலம் அதிரடி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 14: உடல்நலம் மற்றும் மத விஷயங்கள் குறித்த கவலைகளை காரணம் காட்டி, ஆகஸ்ட் 1 முதல் பெர்லிஸ் அரசு வேப் மற்றும் மின்னணு சிகரெட்டுகளின் விற்பனையைத் தடை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 50க்கும் குறைவான வணிகங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால், அவர்கள் மாற்றத்திற்குத் தயாராக இருப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் பெர்லிஸ் மந்திரி பெசார் சுக்ரி ராம்லி கூறினார்.

புதிய, பொருத்தமான வணிகங்களைத் தொடங்க வேப் வர்த்தகர்களுக்கு உதவ மாநில அரசு ஆதரவை வழங்கும் என்று இன்று கங்காரில் நடந்த மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் அவர் தெரிவித்தார்.

வேப் பயன்பாட்டை ஹராம் என்று அறிவிக்கும் தேசிய ஃபத்வா கவுன்சில் ஏற்கனவே ஒரு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த முடிவை முழுமையாக செயல்படுத்த மாநில அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.

Bermula 1 Ogos, kerajaan Perlis akan haramkan penjualan vape dan rokok elektronik atas faktor kesihatan dan agama. Kurang 50 peniaga dijangka terkesan. Kerajaan negeri sedia bantu peniaga beralih ke perniagaan lain.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *