நான் நல்லவன்! அதனால் என்னை யாருக்கும் பிடிக்காது!

- Sangeetha K Loganathan
- 22 May, 2025
மே 22,
தேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தொடர்ந்து மூன்றாவது முறையாக அதன் தலைமை இயக்குநராக நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். என்னை நிறைய பேருக்குப் பிடிக்காது, அதற்கு காரணம் நான் அல்ல, அதற்கு அவர்களே காரணம் என Tan Sri Azam Baki தெரிவித்தார். இது ஒரு சுதந்திர நாடு. அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் உரிமை அனைத்து மக்களுக்கும் இருக்கிறது. விமர்சனங்கள் எல்லாம் உண்மை என நினைத்து செயல்பட்டால் நேரமே விரயமாகுமே தவிர, அதனால் பணிகள் முடக்கம் காணும் என தேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தன்மீதான விமர்சனங்களுக்கு விளக்கமளித்தார்.
முன்னதாகப் பி.கே.ஆர் துணைத் தலைவர் வேட்பாளர் Nurul Izzah Anwar, அசாம் பாக்கியின் பதவி நீட்டிப்புத் தேவையற்றது என கருத்து தெரிவித்திருந்த நிலையில் பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Ahmad Fadhli Shaari இது அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடு என விமர்சனம் செய்திருந்தார். பி.கே.ஆரின் நடப்புத் துணைத் தலைவர் Datuk Seri Rafizi Ramli இது அவசியமற்ற பணி நீட்டிப்பு என கருத்துத் தெரிவித்திருந்தார்.
Ketua Pesuruhjaya SPRM, Tan Sri Azam Baki menjawab kritikan berhubung pelantikan semula beliau buat kali ketiga. Beliau berkata ramai tidak menyukainya bukan kerana kesilapan dirinya, sebaliknya atas sebab peribadi pengkritik sendiri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *