தேர்தலில் BARISAN + PAKATAN கூட்டணி நீடிக்கும்! - Zahid Hamidi

top-news

மே 15,

தேர்தலில் பாரிசானும் பக்காத்தானும் இணைந்து அமைக்கப்பட்டுள்ள கூட்டணி போட்டியிடும் என பாரிசான் நேசனல் தலைவரும் துணைப் பிரதமருமான Datuk Seri Ahmad Zahid Hamidi இன்று உறுதிப்படுத்தினார். PAKATAN HARAPAN கூட்டணியும் BARISAN NASIONAL கூட்டணியும் தற்போது சுமூகமானப் பேச்சுவார்த்தையின் மூலமாகச் சபாவில் நடைபெறவிருக்கும் 17 ஆவது மாநிலங்கவை சட்டமன்றத் தேர்தலில் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் என Datuk Seri Ahmad Zahid Hamidi விளக்கமளித்தார்.

முன்னதாக அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் மலாக்காவில் நடைபெறும் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தானுடன் பாரிசான் கூட்டணியில் இருக்காது என தெரிவித்த நிலையில் Datuk Seri Ahmad Zahid Hamidi கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார். வலுவானக் கட்சியாக இந்த கூட்டணி இருக்கும் என்றும் பக்காத்தானும் பாரிசானும் இணைவது மட்டுமின்றி மற்ற முக்கிய கட்சிகளும் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிப்பதற்குச் சபாவில் பக்காத்தானும் பாரிசானும் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் என்றும் பிரிவினை இல்லாமல் மக்கள் நலனுக்காக நாம் ஒன்றுபட வேண்டிய சூழல் இது என்றும் மக்களும் கட்சி தொண்டர்களும் இதனை ஏற்பார்கள் என Datuk Seri Ahmad Zahid Hamidi நம்பிக்கை தெரிவித்தார்.

Datuk Seri Ahmad Zahid Hamidi mengesahkan BARISAN dan PAKATAN akan terus bekerjasama dalam Pilihan Raya Negeri Sabah ke-17. Kerjasama ini bertujuan memperkukuh gabungan dan memastikan kemenangan demi kesejahteraan rakyat tanpa perpecahan parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *