IPL 2024 கிரிக்கெட் இறுதிப் போட்டி - கொல்கத்தா 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது !

top-news
FREE WEBSITE AD

ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டியில்
ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத்-கொல்கத்தா மோதின.டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் அபிஷேக் 2 ரன்களில் ஆட்டமிழக்க, டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.




அதன்பின்னர், களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியாக ஹைதராபாத் அணி வெறும் 18.3 ஓவரில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தார்.

பின்னர் விளையாடிய குர்பாஸ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் நிதானமாக ஆடி அணியின் ஸ்க்கோரை உயர்த்தினார். இறுதியாக கொல்கத்தா அணி வெறும் 10.3 ஓவரில் இலக்கை எட்டி ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

முன்னதாக கடந்த 2012 மற்றும் 2014ம் ஆண்டு கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் மற்றும் குடும்பத்தினர் வீரர்களுடன் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *