வடக்கு தெற்கு விரைவுச் சாலையில் விபத்து - ஒருவர் பலி

- Shan Siva
- 14 May, 2025
கோலாலம்பூர், மே 14: நேற்று சிரம்பானில் உள்ள வடக்கு-தெற்கு
விரைவுச்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் பதை Km244.8 இல்
எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி, மற்றொரு லாரியின் பின்புறத்தில் மோதியதில் ஒருவர்
உயிரிழந்தார்.
காலை 6.10
மணிக்கு நடந்த இச்சம்பவத்தில் 56 வயதான ஓட்டுநர் தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ
இடத்திலேயே இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு லாரிகளும்
கோலாலம்பூரிலிருந்து ஜொகூர் பாருவுக்குச் சென்று கொண்டிருந்ததாக சிரம்பான்
காவல்துறைத் தலைவர் ஹட்டா சே டின் தெரிவித்தார்.
இன்னொரு லாரியின்
ஓட்டுநர் காயமடையவில்லை.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டதாக ஹட்டா கூறினார்!
Seorang pemandu lori gas berusia 56 tahun maut selepas melanggar belakang lori lain di KM244.8 Lebuhraya Utara-Selatan, arah selatan dekat Seremban. Kejadian berlaku jam 6.10 pagi semalam. Mayat dihantar ke Hospital Rembau untuk bedah siasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *