இன்று வரை மர்மங்கள் விலகாத DOG SUCIDE BRIDGE எனப்படும் நாய்களின் தற்கொலை பாலம்!

top-news
FREE WEBSITE AD


ஸ்காட்லாந்து நாட்டில் 1895 ஆம் ஆண்டு கட்டப்பட்டது  "ஓவர் டவுன் பிரிட்ஜ் ".

கடந்த 129 வருடத்தில் 600 க்கும் மேற்பட்ட நாய்கள் குதித்து,அதில் 50க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்ததால் இந்த பாலத்தை "டாக் சூசைட் பிரிட்ஜ்" என்று அழைக்கிறார்கள்

இந்தப் பாலத்தில் எந்த நாய்களை அழைத்துக் கொண்டு சென்றாலும் நாய்கள் தானாகவே குதித்து விடுகிறது.
பாலத்தின் உயரம் 15 மீட்டர் என்பதால் குதித்த 600 நாய்களில் நிறைய நாய்கள் உயிர் பிழைத்து இருக்கின்றன.



இதைப் பற்றி ஸ்காட்லாண்டில்  வெளிவரக்கூடிய *டெய்லி நியூஸ்* என்கிற ஒரு பத்திரிக்கை "டெய்லி ரிக்கார்ட்" என்ற தலைப்பில் நிறைய விஷயங்கள் கூறப்பட்டிருக்கிறது
எதற்காக இப்படி நாய்கள் பாலத்திலிருந்து  குதிக்கப்படுகிற  விஷயத்தை நிறைய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.



பொதுவாக மனிதனுடைய மூக்கில் "ஆறு மில்லியன் ஓல் ஃபேக்டர் ரிசப்டர்ஸ்" என்கிற விஷயம் உள்ளது. ஆனால் நாயோட மூக்குல "300 மில்லியன் ஓல் ஃபேக்டர் ரிசப்டர்ஸ்"என்கிற விஷயம் இருப்பதனால் நாய்கள் மனிதனை விட பல மடங்கு மோப்பம் பிடிக்கும் சக்தி வைத்திருக்கும்..
ஆக நாய்கள் இந்த பாலத்தின் மேல் போகும்போது அதற்கு பிடிக்காத வாசனையினால் பாலத்தில் இருந்து குதித்து விடுகிறது என்று ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மறுதரப்பு ஆராய்ச்சியாளர்களோ இந்த பாலத்தில் இருந்து குதித்த ஒரு பெண்ணின் ஆவி தான் பாலத்திற்குள் இருந்து பயமுறுத்தி நாய்களை குதிக்க செய்கிறது என்று கூறுகின்றனர்.
ஆனால் எதுவுமே ஆதாரம் இல்லாமல் இருக்கிறது. ஆனால் இதுவரை ஆராய்ச்சியாளர்கள் எவ்வளவு ஆய்வுகள் மேற்கொண்டாலும் நாய்கள் பாலத்திலிருந்து குதித்துக் கொண்டே இருப்பது மர்மமாகவே உள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *