பயணிகள் படகை மோதிய பாதுகாப்புப் படையின் படகு! இருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 16 May, 2025
மே 16,
லங்காவி கடல் பகுதியில் பயிற்சில் ஈடுபட்ட கடல்சார் பாதுகாப்புப் படையின் TLDM அதிவேகப் படகு விபத்துக்குள்ளானதில் படகிலிருந்த 2 அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர். நேற்று மாலை 4.34 மணிக்கு Resort World Langkawi அருகில் இந்த விபத்து ஏற்பட்டதாக லங்காவி மாவட்டக் காவல் ஆணையர் Shariman Ashari தெரிவித்தார். பயிற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்த பாதுகாப்புப் படையின் படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் படகை மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச விமானக் கடல்சார் கண்காட்சியின் முன்னேற்பாட்டுக்கானப் பயிற்சியின் {Pameran Udara dan Maritim Antarabangsa Langkawi 2025 (LIMA '25) போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 2 கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகளும் லங்காவியில் உள்ள Sultanah Maliha மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் படகில் இருந்த ஐவரில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மூவர் காயங்களின்றி பாதுகாப்பாகத் தப்பியதாகவும் லங்காவி மாவட்டக் காவல் ஆணையர் Shariman Ashari விளக்கமளித்தார். இந்த விபத்தில் பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Dua pegawai Agensi Penguatkuasaan Maritim cedera parah selepas bot laju TLDM hilang kawalan dan merempuh bot pelancong yang sedang berlabuh berhampiran Resort World Langkawi ketika latihan awal LIMA '25. Tiada orang awam tercedera.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *