70 கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் சுட்டுக்கொலை!

top-news

மே 16,


மலேசியா முழுவதும் சுமார் 70 க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 2 உள்ளூர் ஆடவர்களைக் காவல்துறையினர் நேற்று இரவு 10 மணியளவில் Bandar Baru நீலாயில் சுட்டுக் கொன்றனர். சம்மந்தப்பட்ட இருவரும் NEGERI SEMBILAN, SELANGOR, PERAK, KUALA LUMPUR ஆகிய பகுதிகளில் சுமார் 70க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என BUKIT AMAN தேசிய குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் DATUK FADIL MARSUS தெரிவித்தார். சுட்டுக் கொலை செய்யப்பட்ட இருவரும் 29 வயது 40 வயது உள்ளூர் ஆடவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


சம்மந்தப்பட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட போது காவல்துறையினரை நோக்கி இருவரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் தற்காப்பிற்காகக் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக BUKIT AMAN தேசிய குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் DATUK FADIL MARSUS தெரிவித்தார். சுடப்பட்ட 40 வயது ஆடவர் மீது 76 குற்றப்பதிவும் இருப்பதாகவும் 29 வயது இளைஞர் மீது 11 குற்றப்பதிவுகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரிகளுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்பதை BUKIT AMAN தேசிய குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் DATUK FADIL MARSUS உறுதிப்படுத்தினார்.

Dua lelaki tempatan yang terlibat dalam lebih 70 kes rompakan di beberapa negeri ditembak mati oleh polis di Bandar Baru Nilai. Kedua-duanya melepaskan tembakan ke arah polis ketika ditahan, menyebabkan polis bertindak balas demi keselamatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *