இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்! - கல்வி அமைச்சு அறிவிப்பு

- Shan Siva
- 16 May, 2025
கூச்சிங், மே 16: கல்வி அமைச்சு இப்போது குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களிடமிருந்து இடமாற்ற விண்ணப்பங்களை அனுமதிக்கும் என்று தெரிவித்துள்ளது.
கூடுதல்
நிபந்தனைகள் இல்லாமல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சர்
ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கருத்துகளையும்,
ஆசிரியர்களின் நல்வாழ்வுக்கான மடானி
அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு
எடுக்கப்பட்டது என்று அவர் இன்று
இங்கு 54-வது தேசிய ஆசிரியர் தின விழாவில் தனது உரையில் கூறினார்.
துணைப் பிரதமர் அஹமட்
ஜாஹிட் ஹமிடியும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
முன்னதாக,
ஆசிரியர்கள் முதல் மூன்று ஆண்டுகளுக்குள்
இடமாற்றங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டுக்கு 1,470 கற்பித்தல் உதவியாளர்களை அமைச்சகம் நியமித்துள்ளதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள், நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில், தலா இரண்டு உதவியாளர்களைப் பெறுவதாகவும் ஃபத்லினா கூறினார்!
Kementerian Pendidikan kini membenarkan guru memohon pertukaran selepas dua tahun berkhidmat. Keputusan ini dibuat demi kebajikan guru. Sebanyak 1,470 pembantu pengajaran juga akan dilantik ke sekolah terpilih berdasarkan kriteria tertentu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *