தேடும் பணி அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது!- அமைச்சர் அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31: கோலாலம்பூர், ஜலான் மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வில் மூழ்கி மாயமான இந்திய மாதுவைத் தேடும் பணி நிறுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சரவையில் அறிக்கையை சமர்ப்பித்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, காவல்துறை, இண்டா வாட்டர் கன்சோர்டியம் (IWK) மற்றும் நிபுணர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்ற பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சர்  டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார். 

தேடல் பகுதியில் வலுவான நீரோட்டம் கொடுக்கப்பட்ட மீட்புப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் உட்பட பல்வேறு காரணிகளால் நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்,   அவர்களுடனும், இந்திய தூதருடனும் தொடர்பில் இருப்பதாகவும் இன்று சனிக்கிழமை ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் செய்தியாளர்களிடம்  கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி, இந்தியாவைச் சேர்ந்த  48 வயது விஜயலட்சுமி  ஜலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் திடீரென ஏற்பட்டு நில அமிழ்வில் மூழ்கி மயமானார்.

8 மீட்டர் ஆழமான குழியில் விழுந்த அவரை, தொடர்ந்து ஒன்பதாவது நாளாகப்
பாதுகாப்புப் படைகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளை உள்ளடக்கிய  SAR குழுவினர் தேடி வந்தனர்.

பாதிக்கப்பட்டவரைக் கண்டறிய,  ஜெட்டிங், ஃப்ளஷிங் மற்றும் தளத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தியது.

இம்முயற்சி கைவிடப்பட்டுள்ளதில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கலக்கமடைந்துள்ளனர்.

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, கோலாலம்பூர் நகராண்மைக் கழகம், சிவில் பாதுகாப்புப் படை, இண்டா வாட்டர் கன்சோர்டியம், மலேசிய அணுசக்தி நிறுவனம் மற்றும் கனிம - புவி அறிவியல் துறை உட்பட 115க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் அயராது ஈடுபட்டனர்.

அரசு எந்திரம் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்டதோடு துணைப் பிரதமர் உட்பட, ,அமைச்சர் பெருமக்கள், கோலாம்பூர் மேயர்,  தேசிய போலீஸ் படைத் தலைவர் அனைத்து தரப்பினரும் களத்தில் நின்று அயராது மேற்பார்வையிட்டனர்.

இருப்பினும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் தற்போது தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

SAR குழு நேற்று நள்ளிரவில் இருந்து, இன்று அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *