மூங்கில் அரிசி எனும் மூலிகை!

top-news
FREE WEBSITE AD

மூங்கில் அரிசியை போன்ற சிறந்த சத்துக்கள் நிறைந்த அரிசியை காண முடியாது.. பழங்குடி மக்களின் மிக மிக முக்கிய உணவாக கருதப்படும் இந்த மூங்கில் அரிசி தரும் நன்மைகள் ஏராளம்.

மூங்கில் மரத்திலிருந்து பெறப்படுகிறது மூங்கில் அரிசி.. பச்சை கலரில் இருந்தாலும் கமகமவென வாசனை நிறைந்ததாக இருக்கும்.. வாசனையாக இருக்கும், அதேநேரத்தில் இனிப்பாகவும் இனிக்கும். அதாவது கோதுமையின் ருசி போலவே இருக்கும். இந்த பச்சை கலர் விதையைதான், உலர்த்தி அரிசியாக பயன்படுத்துகிறார்கள்... எப்போதுமே இந்த அரிசிக்கு மவுசு சற்று அதிகமாகவே உள்ளது.

கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது மூங்கில் அரிசி.. ஆனால் சிறிதும் கொழுப்பு இருக்காது.. ஒரு கப் மூங்கில் அரிசியில் 160 கலோரிகள் உள்ளதால், உடல் எடை குறைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த அரிசியை தாராளமாக பயன்படுத்தலாம் என் அய்வுகள் கூறுகின்றன. உடலின் சர்க்கரை அளவை இந்த உணவு கட்டுக்குள் வைக்கிறது..

உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களும், சுவாச பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களும் இந்த அரிசியை பயன்படுத்தலாம்.. மூங்கில் அரிசியில் வைட்டமின் B6 நிரம்பியிருப்பதால், எலும்புகள், பற்களுக்கு உறுதி தருகிறது.. இந்த அரிசியை சாப்பிட்டு வருபவர்களுக்கு பற்களில் சிதைவு, பற்களில் துவாரம் போன்ற பிரச்சனைகள் வராது.

ருவுறுதலை மேம்படுத்துவதற்கும், பெண்களின் கருப்பைக்கு வலு தருவதற்கும் இந்த மூங்கில் அரிசி பெரிதும் உதவுகிறது.. மாதவிலக்கு கோளாறுகளையும், கர்ப்பிணிகளுக்கு பிரசவ காலத்தில் ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை களையக்கூடியது இந்த அரிசி.. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. ஆண்களுக்கு தாது விருத்தியடைய செய்யவும் இந்த அரிசி பயன்படுகிறது.

குரங்கு, யானை, காட்டு விலங்குகளுக்கு, மூங்கில் அரிசி என்றால் அதிக விருப்பமாம்.. அதேபோல, மன்னர் காலத்தில், படைவீரர்கள் அதிக சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த அரிசியைதான் பயன்படுத்துவார்களாம்.

சர்க்கரை நோயாளிகள் இந்த அரிசியில் காய்கறி சூப் போல செய்து சாப்பிட்டால், உடலுக்கு நன்மைகள் கூடும். மூங்கில் அரிசியை சுத்தம் செய்து, இரண்டு  மணி நேரம் ஊற வைத்து, வழக்கமாக சோறு வடிப்பது போலவே, இதையும் வடித்து எடுத்து கொண்டு உண்ணலாம்.எனவே மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த அரிசியை எடுத்து கொள்வது நல்லது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *