தெரசா கோக் மன்னிப்பு கேட்க வேண்டும்! - பெர்சாத்து இளைஞர் பிரிவு
- Shan Siva
- 07 Sep, 2024
பெட்டாலிங் ஜெயா, செப் 7: செப்பூத்தே எம்பி தெரசா கோக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பன்றி இறைச்சி அல்லது மதுபானம் வழங்காத அனைத்து உணவு நிறுவனங்களுக்கும் ஹலால் சான்றிதழ் குறித்த அவரது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் பெர்சாத்து இளைஞர் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
இனம், மதம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான முக்கியமான பிரச்சினைகளைத் தொட்டதாகக் கூறப்படும் அவர் மீது, காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாக இளைஞர் பிரிவின் தலைவர் வான் அஹ்மத் ஃபய்சால் வான் அகமட் கமால் எச்சரிக்கை விடுத்தார்.
ஹலால் சான்றிதழின் மூலம் சிறு நிறுவனங்களுக்கு சுமை ஏற்படும் என்பதால், கோக்கின் அறிக்கை, இந்த விவகாரத்தில் ஆழமற்றப் புரிதலைக் காட்டியது என்று மாச்சாங் எம்.பி.யான வான் ஃபய்சால் தெரிவித்தார்.
ஹலாலை நாடுவது முஸ்லிம்களின் அடிப்படைக் கடமை. முஸ்லீம்களுடன் தொடர்பு கொள்ளும் அனைத்து வணிகங்களும் இந்த தரங்களுக்கு இணங்க வேண்டும் என்று கோருவதில் வெட்கக்கேடானது எதுவும் இல்லை என்று அவர் தமது முகநூல் பதிவில் கூறினார்.
PAS கட்சியின் பாசிர் மாஸ் எம்பி அஹ்மத் ஃபத்லி ஷாரி, DAP ஹலால் சான்றிதழைப் பற்றி கருத்து தெரிவிப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், அது கட்சி மதத்திற்கு எதிரானது என்ற கருத்தை வலுப்படுத்தும் என்றும் கூறினார்.
அவர்கள் அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால், அவர்கள் அரசாங்கத்தில் உள்ள மற்ற கட்சிகள் மூலம் அதை செய்ய வேண்டும். டிஏபி சார்பாக பேசுவதற்கு அவர்கள் பிகேஆர், அமானா அல்லது அம்னோவுடன் அதன் தலைவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ஃபத்லி கூறினார்.
முன்னதாக, டிஏபி துணைத் தலைவராக இருக்கும் கோக், மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையால் (ஜாகிம்) ஆய்வு செய்து வரும் முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஹலால் சான்றிதழ் தற்போது உணவு வணிக ஆபரேட்டர்களுக்கு தன்னார்வமாக இருப்பதால், ஜாக்கிம் இந்த திட்டத்தை பரிசீலித்து வருவதாக மத விவகார அமைச்சர் நாயிம் மொக்தார் கூறினார்.
இந்த நடவடிக்கை சிறு வணிகங்கள் மீது குறிப்பிடத்தக்க சுமைகளைச் சுமத்தலாம், நுகர்வோர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் மலேசியாவின் கலாச்சார பன்முகத்தன்மையுடன் மோதலாம் என்று கோக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *