ராசியான துபாயில் இந்தியாவுக்கு ஹாட்ரிக் தோல்வியை கொடுப்போம்!

- Muthu Kumar
- 22 Feb, 2025
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாடி வருகிறது.
அந்தத் தொடரில் நடப்புச் சாம்பியனான பாகிஸ்தான் தங்களது சொந்த மண்ணில் முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அதன் காரணமாக செமி ஃபைனலுக்கு செல்ல இந்தியாவுக்கு எதிராக வென்றே தீர வேண்டும் என்ற நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.
மறுபுறம் சமீபத்தில் வலுவான இங்கிலாந்தையே தோற்கடித்த இந்தியா தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனால் பாகிஸ்தானை தோற்கடித்தால் இந்தியா செமி ஃபைனல் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி விடும். இந்நிலையில் 2021 டி20 உலகக் கோப்பையில் முறையாக துபாய் மண்ணில் பாகிஸ்தான் தோற்கடித்தது.
அதே போல 2022 ஆசிய கோப்பையின் முக்கியமான லீக் போட்டியிலும் இந்தியாவை துபாயில் தோற்கடித்த பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறியது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு ராசியாக இருக்கும் துபாய் மண்ணில் இம்முறை இந்தியாவுக்கு ஹாட்ரிக் தோல்வியை கொடுப்போம் என்று அந்த அணியின் ஹரிஷ் ரவூப் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“துபாயில் கடைசியாக சந்தித்த 2 வெற்றிகள் எங்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கே நாங்கள் இந்தியாவை அடுத்தடுத்த வருடங்களில் தோற்கடித்துள்ளோம். அந்தப் போட்டியில் செய்த நல்ல விஷயங்களை இம்முறை மீண்டும் செய்து இந்தியாவை தோற்கடிக்க நாங்கள் முயற்சிப்போம். அது நல்ல போட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”
வரலாறு நன்றாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இம்முறை வெற்றி ஆடுகளத்தை பொறுத்து இருக்கும். அது சுழலுக்கு சாதகமாக இருக்கலாம். எனவே நாங்கள் சூழ்நிலைகளைப் பார்த்து அதை நாங்கள் நன்றாக பயன்படுத்த விரும்புவோம். எங்கள் அணியில் அனைவரும் நன்றாக கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவுக்கு எதிராக எங்களது சிறந்த செயல்பாடுகளைக் கொடுத்து வெற்றியை உறுதியாக பெற முயற்சிப்போம்”
எங்கள் மீது எந்த அழுத்தமும் இல்லை. ரிலாக்ஸாக இருக்கிறோம். நாங்கள் நேர்மறையாக இந்தியாவுக்கு எதிரானப் போட்டியை மற்றப் போட்டியை போலவே எடுத்துக் கொள்கிறோம். நியூசிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்து போனது. நாங்கள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தற்போது கவனம் செலுத்துகிறோம். அப்போட்டியில் செய்தத் தவறுகளை இங்கே நாங்கள் மீண்டும் செய்ய விரும்பவில்லை. இது எங்களுக்கு முக்கியமான போட்டி. நாங்கள் இதில் வென்று செமி ஃபைனலுக்கு செல்வதை உறுதி செய்வோம்” என்று கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *