எம்-லீக்கில் விஏஆர் செயல்பாடுகளை பிஃபா நெறிமுறைகளுடன் ஒத்துப்போவதை உறுதி செய்கிறது எஃப்ஏஎம்
- Hisha Thamil
- 29 May, 2024
கோலாலம்பூர், மே 30-
மலேசிய லீக்கில் வீடியோ உதவி நடுவர் (விஏஆர்) அமைப்பின் செயல்பாட்டை உலகத்தால் நிறுவப்பட்ட நெறிமுறைகளுடன் தொடர்ந்து சீரமைப்பதை உறுதி செய்வதில் மலேசிய கால்பந்து சங்கம் (எஃப்ஏஎம்) உறுதிபூண்டுள்ளது.
எஃப்ஏஎம் துணைத் தலைவரும் எஃப்ஏஎம் நடுவர் குழுவின் தலைவருமான டத்தோ எஸ். சிவசுந்தரம் 2024/2025 பருவத்திற்கான சூப்பர் லீக் போட்டியை மையமாக வைத்து மலேசியா லீக்கில் (எம்-லீக்) விஏஆர் தொழில்நுட்பத்தின் தற்போதைய செயலாக்கத்தை மதிப்பாய்வு செய்ய குழு ஒன்றை நிர்ணயித்துள்ளார்.
மூன்று வார சூப்பர் லீக் போட்டிகளுக்குப் பிறகு, பிபாவின் நிறுவப்பட்ட நெறிமுறைகளை நடுவர்கள் கடைபிடிப்பதால் விஏஆர் செயல்படுத்தல் சீராக உள்ளது என்றார்.
விஏஆர் நடுவர் செயல்திறன், பிபா விஏஆர் நெறிமுறை, 2024/2025 போட்டி விளையாட்டு சட்டங்களுடன் இணங்குவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
எஃப்ஏஎம் நடுவர் குழு எம்-லீக்கில், குறிப்பாக விஏஆர்-ஐ பயன்படுத்தும் போட்டிகளில், நடுவரின் செயல்திறனை தொடர்ந்து கண்காணிக்க பல்வேறு செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அவர் நேற்று முன்தினம் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
விஏஆர் மேட்ச் தரவு பகுப்பாய்வு, எஃப்ஏஎம் விஏஆர் திட்டம், விஏஆர் பயிற்சியின் இரண்டாவது பகுதி, சபாவில் விஏஆர்-ஐ செயல்படுத்தல், போட்டிக்கு, முந்தைய பகுப்பாய்வு ஆகிய ஐந்து செயலாக்கமான நடவடிக்கைகளை அறிக்கை கோடிட்டுக் காட்டியது.
விஏஆர் மேட்ச் தரவு பகுப்பாய்வில், எஃப்ஏஎம் நடுவர் பிரிவு முதல் வாரத்தில் இருந்து விஏஆர்-ஐ பயன்படுத்தி 15 போட்டிகளின் செயல்திறனை ஆய்வு செய்துள்ளதாக சிவசுந்தரம் கூறினார்.
விஏஆர் பயிற்சியின் இரண்டாவது தொகுதிக்கு, ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை திட்டமிடப்பட்ட பயிற்சிக் கட்டத்துடன் விஏஆர் நடுவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எஃப்ஏஎம் பயிற்சியைத் தொடங்கியுள்ளதாக சிவசுந்தரம் கூறினார்.
மொத்தம் 15 நடுவர்கள், 15 உதவி நடுவர்கள் , 10 ரீப்ளே ஆப்ரேட்டர்கள் விஏஆர் அதிகாரிகளாகப் பயிற்சி பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
சபாவில் விஏஆர் அமலாக்கம் குறித்து சிவசுந்தரம் கூறுகையில், கோத்தா கினாபாலுவில் உள்ள லிகாஸ் அரங்கத்தில் விஏஆர் கோல் ஸ்போர்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எஃப்ஏஎம் ஜூன் 6 முதல் 10 வரை பயிற்சி கட்டத்தை நடத்தும் என்றார்.
எம்-லீக்கில் விஏஆர் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் எஃப்ஏஎம் மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் மேலும் காலப்போக்கில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் சிவசுந்தரம் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *