கேபிள் திருடும் கும்பல்! 12 பேர் கைது! சிக்கியது Geng Apan Sungai Petani!

- Sangeetha K Loganathan
- 15 May, 2025
மே 15,
மின்சாரக் கேபிள் திருட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வந்த Geng Apan Sungai Petani எனும் கும்பலைச் சேர்ந்த 12 பேர் மாராங்கில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கைது செய்யப்பட்டதாக Marang மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sofian Redzuan தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 12 பேரும் 22 முதல் 43 வயதுக்குற்பட்ட மலேசியர்கள் என அவர் உறுதிப்படுத்தினார்.
மலேசியாவில் மொத்தம் 14 பகுதிகளில் நிலத்தடி கேபிள்களை இந்த கும்பல் திருடி வந்ததை Marang மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sofian Redzuan உறுதிப்படுத்தினார். இதுவரையில் கெடாவில் 5 இடங்களிலும் பினாங்கில் 4 இடங்களிலும் பெர்லிஸில் 3 இடங்களிலும் கிளாந்தான் திரங்கானுவில் தலா 1 இடத்திலும் இந்த கும்பல் திருடியிருப்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்ததாக Marang மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sofian Redzuan தெரிவித்தார்.
அதிகாலை 5.30 மணிக்குச் சம்மந்தப்பட்ட கும்பல் 2 வாகனங்களில் கிளந்தானில் உள்ள Kampung Sungai Kerak குடியிருப்புப் பகுதியிலிருந்து நிலத்தடி மின்சாரக் கேபிள்களைத் திருடியதாகவும் காவல்துறையினர் சம்மந்தப்பட்ட வாகனங்களைப் பின் தொடர்ந்து, அவர்கள் தங்கியிருந்த தங்கும் விடுதியை முற்றுகையிட்டு 12 பேரையும் கைது செய்ததாகவும் Marang மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sofian Redzuan தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து கேபிள் திருட்டுக்காகப் பயன்படுத்தப்படும் பொருள்களுடன் 200 க்கும் மேற்பட்ட கேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக, பறிமுதல் செய்யப்பட்ட கேபிள்களின் மதிப்பு RM20,000 என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்ட 12 பேரில் 10 பேர் Methaphetamine போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதாகவும் Marang மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sofian Redzuan தெரிவித்தார்.
Sejak 2014, Geng Apan Sungai Petani aktif mencuri kabel elektrik bawah tanah di 14 lokasi seluruh Malaysia. Polis menahan 12 ahli geng di Marang bersama lebih 200 kabel bernilai RM20,000 dan mendapati 10 daripadanya positif dadah methamphetamine.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *