RM7.2 மில்லியன் GIGAMAX வணிக மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது!

- Sangeetha K Loganathan
- 15 May, 2025
மே 15,
வணிக முதலீட்டில் குறிப்பிடத்தக்க GIGAMAX நிறுவன முதலீடு மோசடியில் சம்மந்தப்பட்டுள்ள 3 மலேசியர்கள் வெளிநாட்டுக்குத் தப்பியிருந்த நிலையில் கடந்த மே 6 மீண்டும் மலேசியாவுக்கு வந்த நிலையில் KLIA சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் வணிகக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk Muhammed Hasbullah Ali இன்று தெரிவித்தார். சம்மந்தப்பட்ட மூவரும் 39 முதல் 48 வயதுக்குற்பட்ட மலேசியர்கள் என அவர் உறுதிப்படுத்தினார்.
கைது செய்யப்பட்ட மூவரும் GIGAMAX நிறுவனத்தின் தலைமை பொறுப்புகளை வகித்ததாகத் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட GIGAMAX நிறுவனத்தில் முதலீடு செய்ததாக நம்பப்படும் 100 க்கும் மேற்பட்ட மலேசியர்கள் ஏமாற்றப்பட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் சுமார் RM7.2 மில்லியன் ரிங்கிட் மோசடி நிகழ்ந்திருக்கலாம் தெரிய வந்துள்ளது. புகாரை அடுத்து சம்மந்தப்பட்ட மூவரும் வெளிநாட்டுக்குத் தப்பிய நிலையில் கடந்த மே 6 மீண்டும் மலேசியாவுக்கு வந்த போது கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வருவதாக BUKIT AMAN வணிகக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk Muhammed Hasbullah Ali தெரிவித்தார்.
Tiga warga Malaysia ditahan di KLIA pada 6 Mei selepas kembali dari luar negara kerana terlibat dalam penipuan pelaburan syarikat GIGAMAX yang melibatkan kerugian RM7.2 juta. Lebih 100 mangsa telah membuat laporan polis terhadap sindiket ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *