ஆன்மீகத்தில் ஒரு அதிர்ஷ்ட கடவுள்.. நங் க்வாக் தெய்வம் பற்றிய தகவல்கள்!
- Muthu Kumar
- 16 May, 2024
மலேசியாவில் மட்டுமல்ல இன்று உலகம் முழுவதும் தொழில் சம்பந்தப்பட்ட இடங்களில் அவர்கள் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட தெய்வங்களின் படங்களை வைத்திருந்தாலும், தாய்லாந்து கடவுள் சிலைகளை பார்த்திருப்போம். ஆனால் பல பேருக்கும் அந்த கடவுளின் பெயர் தெரியாது. எதற்காக வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரமும் சரிவரத் தெரியாது. அதை சற்று தெளிவுபடக் கூறும் தகவல்கள் தான் இது.
தன்னுடைய வலது கையை தூக்கியபடி ஒரு தாய்லாந்து பெண் கடவுளை பெரும்பாலான தொழில் செய்யும் இடங்களில் காண முடியும். அந்தப் பெண் கடவுளின் பெயர் "நங் க்வாக்". தாய்லாந்தின் கலாச்சாரமான வீட்டு தெய்வம். அதாவது இந்தியப் கடவுளான லட்சுமி அம்மனைச் சார்ந்த பெண் கடவுள் என்று அழைக்கின்றார்கள்.
தாய்லாந்தின் அரிசி தெய்வமான "மே போ சோப்பின்" மற்றொரு அவதாரம் தான் நங் க்வாக் கடவுளாகும். அதனால் இந்த தெய்வம் சிவப்பு நிற ஆடை அணிந்து, அரிசி சாதத்தை ஏந்தியவாறு காணப்படுகிறார்.
தொழில் சம்பந்தமாகவோ அல்லது வீட்டில் பண பிரச்சினை ஏற்பட்டாலோ லாபம் இல்லாமல் ஒரு தொழில் நடைபெறும் பொழுது செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும், வாடிக்கையாளர்களையும் ஈர்த்துக் கொடுக்கும் ஒரு தெய்வமாக நங் க்வாக் தெய்வம் விளங்குகிறது. தற்போது காணப்படும் நங் க்வாக்கின் உருவம் ஜப்பானிய அதிர்ஷ்ட பூனையான "மானேகி நெகோவின்" கைகளைப் போன்று ஒற்றுமையுடன் காணப்படுகிறது..
சுஜித்த பிரம்மா என்பவர் தனது மனைவியுடன் இந்தியாவின் சவட்டி மாவட்டத்தில் வாழ்ந்து வந்ததாகவும், அவர்கள் தயாரித்த பொருட்களை ஒரு வண்டியை பயன்படுத்தி சந்தையில் விற்க தொலைதூரமாக செல்ல வேண்டியிருந்தது. அப்பொழுது அவர்களின் மகளான சுபாவதியும் உடன் செல்வார்.சந்தையில் ஒரு முறை சக்தி வாய்ந்த துறவியான கசபதேராவின் பிரசங்கத்தை கேட்டு ஈர்க்கப்பட்டு அவரின் பக்தர் ஆனார் சுபாவதி. சுபாவதியின் பக்தியை கண்ட துறவி தொழில், செல்வம் மற்றும் செழிப்பு, அதிர்ஷ்டம் ஆகியவற்றை ஈர்க்கும் சக்தி உனக்கு கிடைக்கும் என ஆசீர்வாதம் செய்தார். சுபாவதியின் சக்தியை உணர்ந்த மக்களும், பெற்றோர்களும் அவளைப் பின் தொடர்ந்து பெரும் பணக்காரர்களாக மாறினர்..ஆசி வழங்கி கொண்டிருந்த சுபாவதி இறந்த பின்பு மக்கள் சுபாவதியின் உருவத்தை வணங்கத் தொடங்கினார்கள். சுபாவதியை "நங் க்வாக் அல்லது பெக்கனிங் லேடி" என்று அழைத்ததுடன் வணிகம் மற்றும் வீடு போன்ற இடங்களில் இவரின் சிலை வைக்கும்படி நடைமுறையில் வந்து விட்டது...
நங் க்வாக் தெய்வத்தை எப்படி முறையாக வணங்க வேண்டும் என்று தெரிய வேண்டும். அப்படி அவரை வணங்கும் முன் புத்தரை மூன்று முறை வணங்க வேண்டும். நங் க்வாக் தெய்வத்தை வணங்கும் பொழுது ஐந்து ஊதுபத்திகள் மற்றும் பூக்கள்.. குறிப்பாக மல்லிகை பூக்கள், பிரசாதமாக சிவப்பு நிற குளிர்பானம்,சிறிது தண்ணீர், இனிப்புகள் மற்றும் அரிசி வைத்து தூபம், மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும். பின்னர் நங் க்வாக் கடவுளின் மந்திரமான "நமோ தஸ்ஸ பகவத்தோ அரஹத்தோ ஸம்மா சம்புதஸ்ஸ" என்று மூன்று முறை சொல்லி வணங்கி வந்தால் தொழிலில் நல்ல லாபம் ஏற்பட்டு வீட்டில் செல்வம் பெருகும்.
தங்களையும்,தங்களை சார்ந்தவர்களையும் பாதுகாத்துக்கொள்ள மற்றும் அதிர்ஷ்டம் எப்பொழுதும் தங்களிடமே இருக்க வேண்டும் என்பதற்காக "நங் க்வாக்" தெய்வத்தை டாலர் போல உருவாக்கி பலர் தங்கள் கழுத்தில் அணிந்தும் கொள்கின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *