மெக்ஸிகோ தியோதிஹிவாகான் மர்மம் என்ன? 2 லட்சம் மனிதர்கள் மாயமானது எப்படி?

top-news
FREE WEBSITE AD

இரண்டு லட்சம் மக்கள் ஒரே இடத்தில் காணாமல் போனது எப்படி மர்மம் என்ன ..

1400 ஆம் ஆண்டில் ஆஸ்ட்ரிக் இன மக்கள் இந்த இடத்தை முதன் முதலில் கண்டுபிடித்தார்கள். இந்த இன மக்கள் அமெரிக்க நாகரீகத்தை கொண்ட மக்கள்.

தியோதிஹிவாகான் என்ற பெயர்தான் இந்த கோவிலின் பெயர். பிரமிடு போல காட்சி அமைக்கும் இந்த கோவில் 1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றது.

தியோதிஹிவாகான் என்றால் தெய்வங்கள் பிறக்கும் இடம் என்று அர்த்தம் என்பதை ஆஸ்ட்ரிக் மக்கள் தான் கண்டறிந்தார்கள். ஆஸ்ட்ரிக் இன மக்கள் இந்த இடத்தை கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இந்த இடத்தில் வாழ்ந்த பழங்குடி இன மக்கள் இரண்டு லட்சம் பேர் ஒரே நேரத்தில் காணாமல் போயிருக்கிறார்கள். இதைப் பற்றி ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டிருந்தாலும் இத்தனை மக்கள் காணாமல் போனதற்கு காரணம் தெரியாமல் பெரிய மர்மமாகவே உள்ளது.
இன்றைக்கும் இந்த இடத்தில் 2000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன நிறைய கோவில்கள், தங்கும் விடுதிகள் என நிறைய கட்டிடங்கள் இங்கு அமைந்துள்ளன.

கடந்த 2003 ஆம் ஆண்டு தியோதிஹிவாகான் பிரமிடுக்கு கீழே ஒரு சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்கத்தில் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பல புதையல்கள் இருப்பது தெரிய வந்தது.  பச்சை பற்கள் கொண்ட பாம்பின் சிலைகளும், விலைமதிப்பற்ற பச்சை கிரிஸ்டல்களால் ஆன சிலைகளும், மெர்குரி குளங்கள் என அங்கே நிறைய காணப்பட்டது அதிசயம்.


பாதி பாம்பின் உடலும் பாதி பறவையும் சிறகுகளுடன் கூடிய ஒரு ராட்சத உயிரினம் இந்த கோவிலை பாதுகாத்து வந்ததுடன், இவர்களின் கலாச்சாரத்தையும், புதையல்களையும் பாதுகாத்து வந்ததாக ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் கோடிக்கணக்கான மதிப்பிலான பழங்காலத்து ஆயுதங்கள், நகைகள், சிலைகள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டன.
உலக சுற்றுலா பயணிகள் அதிகமாக வர வேண்டும் என்ற இடங்களில் மெக்சிகோவில் உள்ள இந்த தியோதிஹிவாகான் இடமும் தவிர்க்க முடியாத இடமாக திகழ்ந்து வருகிறது.


ஏற்கனவே கூறியது போல பாதி பாம்பின் உடலும் பாதி பறவையும் கூடிய பச்சை நிற பாம்பு ஒன்று கடலுக்கு கீழே உள்ள இந்த பிரம்மாண்ட கோவிலை கடலுக்கு மேலே கொண்டு வந்தது என்றும்,அதன் பின் அந்த இடமும் கோவிலும் பசுமையாக செழுமையாக இருந்தது என்றும் அங்கு தோன்றிய பழங்குடியின மக்கள் இந்த உயிரினத்தை சிலைகளாக வைத்து வணங்கியதாகவும் ஏதோ ஒரு காரணத்திற்காக இங்கு வாழ்ந்த இரண்டு லட்சம் மக்கள்களை இந்த உயிரினம் தான் அழித்திருக்க வேண்டும் எனவும் ஆதாரமில்லாத செய்திகள் உலா வருகின்றன.

2 லட்சம் மக்களும் ஏதோ ஒரு காரணத்திற்காக மறைந்தார்களா இல்லை இவர்களின் கதை மறைக்கப்பட்டதா என்பது ஆராய்ச்சியாளர்கள் கூறினால் மட்டுமே மனித குலத்திற்கு தெரிய வரும் உண்மை.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *