எனக்கும் மெஸ்ஸிக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை- ரொனால்டோ!

top-news
FREE WEBSITE AD

ரியாத், பிப்.14-

கிறிஸ்டியானோ ரொனால்டோ லியோனல் மெஸ்ஸியுடனான தன் உறவை பற்றி வெளிப்படையாகப் பேசியிருகிறார்.எனக்கும் மெஸ்ஸிக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என ரொனால்டோ கூறியுள்ளார். கால்பந்து உலகின் இருபெரும் ஜாம்பவான்கள் தான் ரொனால்டோ, மெஸ்ஸி.

கடந்த பல ஆண்டுகாலமாக கால்பந்து ஆட்டத்தில் இருவரும் பல சாதனைகளை செய்து வருகின்றனர். இருவருக்கும் கோடானகோடி ரசிகர்கள் உள்ளனர். ரொனால்டோ, மெஸ்ஸியால் பலர் இந்த ஆட்டத்தை பின்தொடர்ந்து வருகின்றனர்.

அந்தளவிற்கு கால்பந்து ஆட்டத்தை உலகளவில் எடுத்துச் சென்றவர்கள் தான் இவர்கள்.இந்நிலையில் ரொனால்டோ, மெஸ்ஸி இருவரின் ரசிகர்களும் அவ்வப்போது சமூக ஊடகங்களில் மோதிக்கொள்கின்றனர்.ரசிகர்களுக்கு இடையே மோதல் இருப்பதை போல ரொனால்டோ, மெஸ்ஸிக்கும் மோதல் இருக்கும் என சிலர் பேசி வந்த நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரொனால்டோ.

சமீபத்தில் பேசிய ரொனால்டோ, எனக்கும் மெஸ்ஸிக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளார். நாங்கள் இருவரும் நட்பாகவே தான் உள்ளோம். எங்களுக்குள் கசப்பான நிகழ்வு எதுவும் நடக்கவில்லை. நல்ல நட்பில்தான் இருக்கின்றோம் என்றார் ரொனால்டோ.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *