நாடு தொடர்ந்து சிறந்த நிலையில் உள்ளது! - அன்வார்
- Shan Siva
- 07 Sep, 2024
கோலாலம்பூர், செப் 7: சாதகமான மற்றும்
வணிக நட்பு சூழல் அமைப்புடன் நிலையான தேசத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளை
அரசாங்கம் தொடர்ந்து தீவிரப்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
நாட்டை மேம்படுத்தவும், ஊழலை எதிர்த்துப்
போராடவும், அதிக மதிப்புள்ள
முதலீடுகளில் கவனம் செலுத்தவும் போன்ற அரசாங்கத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகள்,
அதிகளவிலான மக்களுக்கு அதிக வருமானம் தரும்
வேலைகளை உருவாக்குவதில் வெற்றியடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாடு தொடர்ந்து சிறந்த நிலையில் உள்ளது. 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.9 விழுக்காட்டுடன் வலுவான வளர்ச்சியைக்
காட்டியுள்ளது.
அது தவிர, அமெரிக்க டாலர்
மற்றும் பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் சமீபத்திய மீட்சி, இந்த ஆண்டு FBM KLCI இன் விரைவான உயர்வுடன் சேர்ந்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.
மதனி அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் நேர்மறையான முடிவுகளைத்
தந்துள்ளன என்பதற்கு இது தெளிவான சான்றாகும், என்றும், இறைவனுக்கு நன்றி
என்றும் அவர் கூறினார்.
நாடு இப்போது உலகளாவிய முதலீட்டிற்கு விருப்பமான இடங்களில் ஒன்றாக விளங்குகிறது
என்று, இன்று மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிமின்
உத்தியோகபூர்வ பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் இணைந்த முதலீட்டு விழாவில்
கலந்துகொண்டு உரையாற்றும் போது அன்வார் இதனைத் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *