சித்தர்கள் காட்டிய எட்டு 8 வடிவ நடை பயிற்சி!

top-news
FREE WEBSITE AD

ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும். பயிற்சியும் செய்முறையும்,மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்று வரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் "1" குறியில் இருந்து ஆரம்பித்து "5" வரை சென்று மீண்டும் "1" வர வேண்டும்.நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.தினமும் காலையும் மாலையும் 15 - 30 நிமிடங்கள் நடப்பதுமிகச்சிறப்பு.

நடக்கவேண்டிய நேரம் காலை அல்லதுமாலை மணி 5 - 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற,இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.மனதிற்குள் மந்திரம் ஜெபித்தபடி நடக்கலாம். முத்திரைகள் செய்ய தெரிந்திருந்தால் பிராண முத்திரையில் நடக்கலாம். இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இரு நாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.

பின்னர்நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..

சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும்.முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது. காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம்குறைக்கப்படுகிறது.இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.

முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கரவண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.தினமும் 'எட்டு' நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன.

நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.வளமோடும் , நலமோடும் வாழ முயற்சித்து பார்க்கலாமே.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *