அமெரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி எடுக்க ஒரு வார காலம் இருக்கு!

top-news
FREE WEBSITE AD

கடந்த 2 மாதங்களாக இந்திய ரசிகர்களுக்கு விருந்து படைத்த இந்தத் தொடரில் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதில் குவாலிபயர் 1 போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

மறுபுறம் எலிமினேட்டரில் பெங்களூருவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய ராஜஸ்தான் குவாலிபயர் 2 போட்டியில் ஹைதராபாத்திடம் தோல்வியை சந்தித்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து மே 26 ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள ஐபிஎல் 2024 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. அதில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.


ஆனால் அந்தப் போட்டியில் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடத் தேர்வாகியுள்ள ஒரு வீரர் கூட இடம் பெறவில்லை என்பது இந்தியாவுக்கு அதிர்ஷ்டமாகியுள்ளது. அதனால் உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு எக்ஸ்ட்ரா நேரம் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. முதலாவதாக மும்பை அணி லீக் சுற்றுடன் வெளியேறியதால் அந்த அணியில் இடம் வகிக்கும் கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஐபிஎல் ஃபைனலில் விளையாடவில்லை.

நேற்று ராஜஸ்தான் தோல்வியை சந்தித்ததால் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், சஹால் ஆகியோரும் விளையாடப் போவதில்லை. அதே போல எலிமினேட்டர் போட்டியில் வெளியேறிய பெங்களூரு அணியின் விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரும் வெளியேறி விட்டனர். பிளே ஆஃப் சுற்றை நூலிலையில் தவறவிட்ட சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே ஆகியோரும் வெளியேறினர்.

மேலும் பிளே ஆஃப் சுற்றை தொடாமலேயே வெளியேறிய டெல்லி அணியில் ரிஷப் பண்ட், அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரும் ஃபைனலில் விளையாடப் போவதில்லை. அத்துடன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அர்ஷிதீப் சிங் உட்பட இந்தியாவுக்காக உலகக் கோப்பையில் தேர்வாகியுள்ள 15 வீரர்களும் ஐபிஎல் ஃபைனலில் விளையாடப் போவதில்லை. அதன் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து முன்னதாகவே வெளியேறியுள்ள இந்திய வீரர்கள் இன்றிரவு அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் பறக்க உள்ளனர்.

அங்கே சென்று முழுமையாக 7 நாட்கள் பயிற்சி எடுக்க உள்ள இந்திய அணியினர் அமெரிக்காவின் கால சூழ்நிலைகளை தெரிந்துக்கொள்ள நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜுன் இரண்டாம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. அதனால் இம்முறை ஐபிஎல் தொடரால் இந்தியாவுக்கு தயாராக போதுமான நேரம் கிடைக்கவில்லை என்ற சாக்கை யாரும் சொல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *