பாமகவின் கட்சி மோதல் உட்கட்சி மோதல் தாண்டி குடும்ப மோதலாக மாறியுள்ளது!

- Muthu Kumar
- 29 Dec, 2024
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட அறிவிப்பு தமிழக அரசியலை உலுக்கியதோ இல்லையோ பாமகவை உலுக்கி உள்ளது. பாமக தலைவர் அன்புமணிக்கு உதவி செய்ய இளைஞரணி சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிக்கிறேன் என்று ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு அந்த கட்சியையே நொறுக்கி போட்டு உள்ளது..
பாமகவின் இளைஞரணி சங்க தலைவராக முன்னாள் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் இருந்தார். இந்த நிலையில் அவர் அந்த பதவியிலிருந்து விலகிவிட்டார். இதையடுத்து இளைஞரணி சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிக்கிறேன் என்று ராமதாஸ் அறிவித்தார்.
இதை ஏற்றுக்கொள்ளாத அன்புமணி எனக்கு எதற்கு உதவி எனக்கு உதவி எல்லாம் வேண்டாம். இப்படியே குடும்பத்து ஆட்களை உள்ளே கொண்டு வாருங்கள்.பிரச்சனைதான் வரும் என்று அன்புமணி கூறினார். அதோடு அவர் எல்லாம் சேர்ந்தே 4 மாதம்தான் ஆகிறது. அதற்குள் பதவி எப்படி தர முடியும்.
கட்சியில் பணியாற்றியவர்களுக்கு பதவி தாருங்கள். நல்ல திறமையானவர்களுக்கு பதவி தாருங்கள். இதைவிட குடும்பத்து ஆட்களை எப்படி நியமிக்கலாம் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து கோபம் அடைந்த ராமதாஸ் நான்தான் கட்சியை உருவாக்கினேன். நான் சொல்வதைதான் கேட்க வேண்டும். நான் சொல்வதே சட்டம். கேட்க விருப்பம் இல்லை என்றால் போ கட்சியை விட்டு போ என்று கோபமாக கூறினார்.இதையடுத்து அன்புமணி எனக்கு பனையூரில் ஒரு ஆபிஸ் உள்ளது. அங்கே வாருங்கள். என்னிடம் பேச விரும்புபவர்கள் அங்கே வாருங்கள் என்று கோபமாக கூறினார்.,
இதையடுத்து அன்புமணிக்கு முகுந்தன் மேல் என்ன கோபம்? என்று நெட்டிசன் ஒருவர் விளக்கி உள்ளார் . மாடர்ன் திராவிடன் என்ற பக்கத்தில் இந்த மோதல் பற்றி விளக்கப்பட்டு உள்ளது. அதில்,மருத்துவரின் ஒரு மகள் ஸ்ரீகாந்தி எனும் காந்திமதி.இவரின் கணவர் பரசுராமன்.இவர்களுக்கு இரண்டு மகன்கள். முகுந்தன் மற்றும் ப்ரீத்திவன்.இதில் ப்ரீத்திவனை மருமகன் ஆக்கி கொண்டார் அன்புமணி.அதாவது தமது மூத்த மகள் சம்யுக்தாவிற்கு தமது அக்கா மகன் ப்ரீத்திவனுக்கு திருமணம் செய்து வைத்தார்.
அன்புமணியின் நெருங்கிய உறவாக மாறினார் ப்ரீத்திவன்.அக்கா மகன் என்பதை தாண்டி மருமகன், மகள் புருஷன் என்ற அளவில் நெருங்கினார். இதனால் சொத்து அதிகாரம் என அனைத்திலும் ப்ரீத்திவன் கை ஓங்கி இருந்தது.
இதனை கண்டு மனம் உடைந்த முகுந்தன் தமது தாய் மூலம் தமக்கும் பெரிய எதிர்காலம் சொத்து அதிகாரம் வேண்டும் என தாத்தா ராமதாஸ்க்கு அழுத்தம் கொடுத்து பதவி வாங்கி விட்டார்.முகுந்தன் வளர்ந்து தமது மருமகனை எதிர்காலத்தில் டம்மி ஆக்கி விடுவாரோ என அஞ்சியே இன்று மேடையில் கோபமுற்றார் அன்புமணி.
இது அரசியல் சண்டை இல்லை.தமது மருமகனை அதாவது மகள் கணவரை காப்பாற்ற துடிக்கும் மாமாவின் குரல் என்று குறிப்பிட்டு உள்ளார். பாமகவில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் உட்கட்சி மோதல் என்பது தாண்டி குடும்ப மோதலாகவும் மாறி உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *