உலகின் முதல் தங்க விடுதி!

top-news
FREE WEBSITE AD

11 ஆண்டுகள் கடும் உழைப்புக்குப் பின் கதவின் கைப்பிடி முதல் கழிவறைகள் வரை 24 காரட் தங்கத்தில் ஜொலிக்கும் உலகின் முதல் தங்க விடுதி வியட்நாம் தலைநகர் Hanoiயில் அமைந்துள்ளது.

Dolce Hanoi Golden Lake hotel என்னும் ஹோட்டல்தான், உலகின் முதல் முழுமையான தங்க ஹோட்டல் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.

25 தளங்களைக் கொண்ட இந்த தங்கும் தங்க விடுதியில் 400 அறைகள் உள்ளன. அந்த அறைகளில் எங்கு திரும்பினாலும் கண்ணில் படும் ஒரே விசயம் தங்கம்தான்.11 ஆண்டுகள் கடின உழைப்பால் உருவாக்கப்பட்டுள்ள இந்த விடுதியின் வாசலில் உள்ள கதவின் கைப்பிடி,  குளியல் தொட்டி, சுவர்கள், கழிவறை என அனைத்தும் 24 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.

விடுதியின் சுவர்கள் மட்டுமல்ல, அந்த விடுதியில் வழங்கப்படும் உணவிலும் தங்கம் உள்ளது. ஆம் இங்கு பரிமாரப்படும் இறைச்சி உணவும் மெல்லிய தங்கத் தாளினால் சுற்றப்பட்டுதான் பறிமாறப்படுகிறது.இந்த தங்க விடுதியில் தங்குவதற்கான கட்டணம் அடிப்படை வசதிகள் கொண்ட அறைகளுக்கு இரவொன்றிற்கு 250 பவுண்டுகளும், அனைத்து வசதிகளும் கொண்ட executive suites எனும் ஆடம்பர அறைகளுக்கு 800 பவுண்டுகளும் ஆகும்.

இந்த ஹோட்டலில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால், உலகில் தங்கத்தால் செய்யபட்ட பொருட்களைக் கொண்ட ஹோட்டல்கள் இருக்கலாம். ஆனால், இந்த ஹோட்டலின் வெளிப்புற சுவர்கள் முழுவதும் சுமார் ஒரு டன் தங்கம் பதிக்கப்பட்டுள்ளதால், இப்படி ஒரு தங்கும் தங்க விடுதியை  வேறெங்கும் பார்க்கமுடியுமா என்பது சந்தேகம்தான்...

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *