இ-மெயில் எனும் மின்னஞ்சலின் தந்தை திரு சிவா அய்யாதுரை!

top-news
FREE WEBSITE AD

இ-மெயில் எனும் மின்னஞ்சலின் தந்தை திரு சிவா அய்யாதுரை...


தனது ஏழாம் வயதில் தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டை விட்டு பெற்றோருடன் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தவர் தான் திரு சிவா அய்யாதுரை எனும் அசாத்திய தமிழன்.
தனக்கென ஒரு பாதை,தனக்கென ஒரு குணத்துடன் படிப்பில் தனித்திறனுடன் நன்கு தேர்ச்சி பெற்றவர் சிவா அய்யாதுரை அவர்கள்.
அமெரிக்காவில் 1978 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுதே தகவல்களை கம்ப்யூட்டரின் உதவியோடு மின்னஞ்சல் வழி அனுப்பும் முறையை உருவாக்கி அதற்கு "இ-மெயில்" என்ற பெயர் வைத்து அதற்கான copy right ஐ அமெரிக்காவில் உள்ள  தலைமை அலுவலகத்தில் இருந்து 1982 ஆம் ஆண்டு பெற்று இருக்கிறார் அய்யாதுரை அவர்கள்.

ஆனால் இன்று "இ-மெயில்" என்ற ஒன்று பொதுவான  பழக்கவழக்கத்தில் இருப்பதாலும் சிவா அய்யாதுரை கண்டறிந்த இ-மெயில் போன்ற மின்னஞ்சல் ஒரே ஒற்றுமையுடன் காணப்படுவதாலும் நிறைய கருத்து வேறுபாடுகள் இவரைப் பற்றி நிலவி வருகின்றன.
1979 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள "லிவிங்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில்" படித்துக் கொண்டிருக்கும் பொழுது சிவா அய்யாதுரை அவர்களுக்கு வயது 14. அந்த வயதில் தனது மின் அஞ்சல் கண்டுபிடிப்பை ஆரம்பித்தார். யூனிவர்சிட்டி ஆஃப் மெடிசின் அண்ட் டெண்டிஸ்ட்ரீ ஆஃப் நியூ ஜெர்சி" மாணவர்கள் தங்களின் பாடத் தகவல்களை பரிமாறிக் கொள்ள "மின்வ்ழி அஞ்சல்" என்ற புது முறையை உருவாக்கினார்.

ந்த புதிய முறையை கண்டுபிடித்ததற்காக 1981 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான "வெஸ்ட்டிங் ஹவுஸ் சயின்ஸ் டேலண்ட் செர்ச்" எனும் விருதை வென்றார் 14 வயதான சிவா அய்யாதுரை அவர்கள்...

2011 ஆம் ஆண்டு "டைம் மேகஸின்" நடத்திய "த மேன் ஹூ இன்வெண்டெட் இமெயில்" என்ற நேர்காணலில் சிவா அய்யாதுரை அவர்கள்தான் ஈமெயிலை கண்டுபிடித்ததாக கூறப்பட்டது..
அதற்கிடையில் சிவா அய்யாதுரையின் இந்த கண்டுபிடிப்பிற்கு முன்னரே "ரே தாம்லின்சன்" என்பவர் 1971ல் இரண்டு கம்ப்யூட்டர்களுக்கு இடையே தகவல்களை பரிமாறும் முறையை கண்டுபிடித்துவிட்டார்.
ஆகவே "ரே தாம்லின்சன்" மட்டுமே இ மெயில் ஐ கண்டுபிடித்தார் என இன்றும் அமெரிக்க ஊடகத்தின் வழிக் கூறப்பட்டு வருகிறது..

ஆனால் "தாம்லின்சனும், மற்றவர்களும்" கண்டுபிடித்தது  இரு கம்ப்யூட்டர்களுக்கு இடையே குறிப்புகளை மாற்றிக் கொள்ளும் முறை என்றும், தான் கண்டுபிடித்தது ஒரு அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வழியாக செய்திகளை அனுப்பும் முறை என்றும், அதற்குதான் ஈமெயில் என பெயர் வைத்ததாக சிவா அய்யாதுரை கூறுகிறார்..

சிவா அய்யாதுரை அமெரிக்காவில் எம் ஐ டி யில் படிக்கும் பொழுது அவருக்கு பேராசிரியராக இருந்த "நோம் சோம்ஸ்கி" அய்யாதுரையின் இ -மெயில் கண்டுபிடிப்பை மறுப்பவர்கள் உண்மையை திசை திருப்ப முடியாது என்றும், குழந்தைத்தனமாக அடம் பிடிக்கக் கூடாது என்றும்,  குழப்பம் உண்டாக்கக் கூடாது என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் 1982 ஆம் ஆண்டு தான் கண்டுபிடித்த இமெயில் க்கான அனைத்து  ஆவணங்களையும்  முறையாக சமர்ப்பித்து "copy right " பெற்று இருக்கிறார் என்றும் பேராசிரியர் தெளிவுபடக் கூடியிருக்கிறார்..

ஆகவே அன்றைய காலகட்டத்தில் அமெரிக்கர்கள் நிறவெறி காரணமாகவும், வரலாற்று நிகழ்வுக்காகவும் சிவா அய்யாதுரையின் கண்டுபிடிப்பை நிராகரித்து,"ரே தாம்லின்சனின்"  கண்டுபிடிப்பை ஆதரித்து சிவாஅய்யாதுரைக்கு எதிராக அமெரிக்க வரலாறு சொன்னாலும், உண்மையிலேயே ஈமெயிலின் தந்தை என்றால் தமிழனான அது திரு சிவா அய்யாதுரை மட்டுமே... அதற்குப் பின் தான் மற்றவர்கள் என உலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன..
இன்றும் அமெரிக்க ஊடகங்கள் "ரே தாமில்சனை" இமெயிலை கண்டுபிடித்தவர் என்று கூரினாலும், உலகத்திற்கு தெரியும் உண்மையான ஈமெயிலை கண்டறிந்தவர் சிவா அய்யாதுரை தான் என்று...

சிரித்த முகத்துடனும் சிந்தனை ஆற்றலிலும் இருக்கும்  60 வயதான சிவா அய்யாதுரை "எகோமெயில்" எனும் மின்னஞ்சல் வழங்கு நிறுவனத்தை உருவாக்கி
**1996 இல் "நியூயார்க்கின் ஆல்வர்த்" பதிப்பகம் வெளியிட்ட "ஆர்ட்ஸ் அண்ட் த இன்டர்நெட்" என்ற புத்தகத்தையும்,
** 1997இல் "இன்டர்நெட் பப்ளிசிட்டி கைட்" என்ற மற்றொரு புத்தகத்தையும் தன் கைப்பட எழுதி மாணவர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *