நடராச பெருமானின் வலது கால் மிதித்து அமுக்கியிருக்கும் அந்த உருவம் யார் ?கதை என்ன?

top-news
FREE WEBSITE AD

நடராஜரின் வலது கால், முயலகன் என்பவன் மீது இருக்கிறது. இவனை, "அபஸ்மாரன்' என்று அழைப்பார்கள். இவன் வளைந்து நெளிந்து, அஷ்ட கோணலாகப் படுத்திருப்பான். "அபஸ்மாரம்' என்றால், "வளைந்து நெளிதல்' என்பர். காக்கா வலிப்பு நோய் வந்தவருக்கு, கையும், காலும் இழுத்து, எந்த நிலையில் தரையில் கிடப்பாரோ, அப்படி ஒரு நிலை. "முசலகம்' என்றால், "காக்கா வலிப்பு!' இதனால், அவன், "முசலகன்' என்றாகி, தமிழில் முயலகன் ஆனான்.


திருப்பராய்த்துறை என்ற தாருகா வனத்தில் 48 ஆயிரம் ரிஷிகள் தங்கள் பத்தினிகளோடு வாழ்ந்து வந்தனர். அவர்கள் வேள்விகள் பல நடத்தி பல்வேறு சக்திகள் பெற்றனர். இதனால் அவர்களுக்கு செருக்கு மிகுதியானது. இந்த செருக்கை அடக்கிட சிவபெருமான் திருவுளம் கொண்டு பிச்சாடனார் வேடம் எடுத்து வந்தார்.

பிச்சாடனார் வேடம் எடுத்துவந்தவரை அழிக்க ஆபிசார வேள்வியை முனிவர்கள் நடத்தினர். அந்த வேள்வியிலிருந்து வெளிப்பட்ட புலி, யானையை கொன்று அதன் தோலை உடுத்திக்கொண்டார். மான், மழுவை கையில் ஏந்திக்கொண்டார். முயலகன் என்ற அரக்கனை போரிட்டு வென்று தன் காலடியில் மிதித்து நடனமாடினார். தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அடக்கி இறைவன் ஒருவனே என்பதை சிவபெருமான் உணர்த்தினார்.

ஆகையால், இந்த முயலகன் ஆணவத்தைக் குறிப்பவனாகிறான். மனிதன் தன்னிடமுள்ள அகங்காரத்தை, நடராஜர், காலில் இட்டு மிதித்திருப்பது போல் தனக்குள் புதைத்துக் கொள்ள வேண்டும். அதை, வெளியே காட்ட அனுமதிக்கவே கூடாது என்பதை இந்த தத்துவம் உணர்த்துகிறது.

ஆணவத்தின் பிடியில் சிக்கியிருப்பவர் ஒரு போதும் இறைவனை அணுக முடியாது. ஆகையால், ஆணவத்தை அடக்கி இறைவனை அடைவோம். ஆனந்தம் பெறுவோம்.

நமசிவாய. திருச்சிற்றம்பலம்.

வாழ்க தமிழ்!..வளர்க தமிழின் புகழ்!

( குறிப்பு: நடராஜர் தத்துவம் என்ற நூலில் இருந்து தொகுக்கப்பட்டது இந்த தகவல் )

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *