இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார்?

top-news
FREE WEBSITE AD

 இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் முடிவடைந்ததை ஒட்டி புதிய பயிற்சியாளரை தேடிக் கொண்டிருக்கிறது பிசிசிஐ.
அடுத்து இந்திய அணி பல முக்கியமான போட்டிகளில் விளையாடவிருக்கிறது அதனால் திறமையான பயிற்சியாளர் மிகமிக அவசியம் என ஜெயிஷா தீவிர தேடலில் இறங்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக அயல்நாட்டு பயிற்சியாளர்களை தேர்வு செய்வதில்லை. ராகுல் டிராவிட், ரவி சாஸ்திரி, அணில் கும்ப்ளே போன்ற நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் பயிற்சியாளராக இருந்து வருகின்றனர். இந்த ஜூன் இறுதியில் 20 ஓவர் உலக கோப்பையோடு ராகுல் டிராவிட் கிளம்புகிறார்.

அடுத்த பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மனுக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் இந்திய அணிக்காக விளையாடி அனுபவம் இருக்கிறது. ராகுல் டிராவீட்டும் இவர் பெயரை தான் பரிந்துரை செய்து வருகிறாராம். ஆனால் பிசிசிஐ ஆஸ்திரேலியா முன்னாள் ஜாம்பவான் ஜஸ்டின் லாங்கரை ஒரு ஆப்ஷனாக வைத்திருக்கிறது.
இந்திய அணி மினி உலகக் கோப்பை போட்டி, ஏசியா கப், 2026 இல் மற்றும் ஒரு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி, 2027 உலகக்கோப்பை போட்டி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தகுதி பெற்றால் அந்த போட்டி என அடுத்தடுத்து முக்கியமான பல போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இதனால் இப்பொழுது பிசிசிஐ அதிரடியாக ஒரு முடிவு எடுத்து இருக்கிறது. மகேந்திர சிங் தோனியை  இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கலாம் என ஒரு திட்டம் போட்டு வருகிறது. ஆனால் அதற்கு தோனி சம்மதிப்பாரா என்று தெரியவில்லை, இருந்தாலும் இப்பொழுது இந்திய அணிக்கு பயிற்சியாளர் தேடும் பொறுப்பை தோனியிடமே ஒப்படைத்து விட்டதாம் இந்திய கிரிக்கெட் வாரியம்.

இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஐபிஎல் - லில் தோனிக்கு ஒரு முடிவு வந்தாலும்  பி சி சி ஐ அவரை விடுவதாக இல்லை.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *