கைது செய்யப்பட்ட 299 வெளிநாட்டினர்களைத் தாய்நாட்டு அனுப்பிய IMIGRESEN!

- Sangeetha K Loganathan
- 16 May, 2025
மே 16,
ஜொகூரில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 299 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்குத் தேசிய குடிநுழைவுத் துறை அனுப்பி வைத்துள்ளது. இந்தோனேசியாவைச் சேர்ந்த 107 பேர், பங்களாதேஷைச் சேர்ந்த 78 பேர் மியன்மாரைச் சேர்ந்த 50 பேர், தாய்லாந்தைச் சேர்ந்த 32 பேர், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 26 பேர், நேப்பாளத்தைச் சேர்ந்த 6 பேர் என மொத்தம் 299 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தேசியக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
காலாவதியானக் கடப்பிதழைக் கொண்டிருந்தது, உரிமம் இல்லாமல் வணிகத்தில் ஈடுபட்டு வந்தது எனும் குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறை தண்டனைக்குப் பின்னர் அவர்களின் நாட்டுத் தூதரகத்தின் உதவியுடன் அவர்களின் சொந்த நாட்டுக்கு அவர்களை அனுப்பியிருப்பதாகவும் மீண்டும் அவர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
Seramai 299 warga asing yang ditahan atas pelbagai kesalahan imigresen di Johor telah dihantar pulang ke negara asal masing-masing selepas menjalani hukuman. Mereka dilarang memasuki Malaysia semula, menurut Jabatan Imigresen Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *