நாங்க இல்லன்னா இந்த உலகம் பிளாஸ்டிக் உலகம்! மெழுகு புழுக்களைப் பற்றிய தகவல்கள்..

top-news
FREE WEBSITE AD

உடலில் நொதிகள் அதிகம் உள்ள இந்த நெளியும் புழுக்கள் நெகிழியைச் சிதைக்கின்றன. இவை அப்படிச் செய்யவில்லையெனில் இந்த ப்ளாஸ்டிக் சிதைவதற்கு பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகள்கூட எடுக்கும்.

முதல் பார்வையில் மெழுகுப்புழுக்கள் பற்றி குறிப்பாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை. மெழுகு அந்துப்பூச்சிகளின் வளைந்து நெளியும் லார்வா வடிவம், தேனீக்கள் தங்கள் தேன்கூடுகளை உருவாக்கப் பயன்படுத்தும் மெழுகைச் சாப்பிடுகின்றன. தேனீ வளர்ப்பவர்கள் ஒரு நொடிகூட யோசிக்காமல் இந்தப் புழுக்களை அழித்துவிடுவார்கள்.

ஆனால் 2017ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலில் முதுகெலும்பு கொண்ட விலங்குகளின் கரு வளர்ச்சியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மூலக்கூறு உயிரியலாளர் ஃபெடெரிகா பெர்டோச்சினி, மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கக்கூடிய, இந்த உயிரினங்கள் பற்றிய ஒரு கண்டுபிடிப்பைச் செய்தார்.

 பெர்டோச்சினி என்பவர் தேனீ வளர்ப்பவர். தேன்கூட்டை சுத்தம் செய்த பிறகு சில மெழுகுப் புழுக்களை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து, அவற்றை அங்கே விட்டுவிட்டார். சிறிது நேரம் கழித்து இந்தப் புழுக்கள் பிளாஸ்டிக்கில் சிறிய துளைகளை உருவாக்கத் தொடங்கியதை அவர் கவனித்தார். புழுக்களின் வாய் பட்டவுடனேயே ப்ளாஸ்டிக் சிதைய ஆரம்பித்தது.

இந்தப் புழுக்களின் 'உமிழ்நீரில்' செரிஸ், டிமீட்டர் என்ற இரண்டு முக்கியமான நொதிகள் இருந்தன.

" அது ஒரு அருமையான கண்டுபிடிப்பு தருணம் என்று தனது ஆரம்ப கண்டுபிடிப்பு மற்றும் அதன் அர்த்தம் என்ன என்பது மனதில் பதிந்த அந்தத் தருணத்தை பெர்டோச்சினி விவரிக்கிறார்.

"அதுதான் கதையின் ஆரம்பம். ஆராய்ச்சித் திட்டத்தின் ஆரம்பம், எல்லாவற்றுக்குமான ஆரம்பம்," என்று அவர் குறிப்பிட்டார்.

மனிதர்களாகிய நமக்குச் செய்யக் கடினமாக இருக்கும் ஒன்றை அந்தப் புழுக்கள் செய்து கொண்டிருந்தன. அதுமட்டுமல்லாமல் அந்தப் புழுக்கள் உணவு போல ப்ளாஸ்டிக்கை ஜீரணிப்பது போலவும் தோன்றியது.

பெர்டோச்சினி மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் புழுக்களின் வாயில் இருந்து சுரந்த திரவங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். இந்த 'உமிழ்நீரில்' செரிஸ், டிமீட்டர் என்ற இரண்டு முக்கியமான நொதிகள் இருந்தன. இவை முறையே ரோமன் மற்றும் கிரேக்க வேளாண் பெண் தெய்வங்களின் பெயர்களாகும். அவை பிளாஸ்டிக்கில் உள்ள பாலிஎத்திலீனை ஆக்சிடைஸ் செய்து சிதைவை ஏற்படுத்தின.

இந்த புழுக்களின் நொதிகளை பிளாஸ்டிக் கழிவுகளில் பயன்படுத்துவதே இறுதி குறிக்கோள்," என்கிறார் பெர்டோச்சினி.

தேன் கூடுகளை அழிக்கும் அவற்றின் திறனைப் பார்க்கும்போது அவற்றை பிளாஸ்டிக் மாசுபாட்டு சூழலில் அப்படியே விடுவது சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்று பெர்டோச்சினி குறிப்பிடுகிறார். ஆனால் இந்த புழுக்களால்  உற்பத்தி செய்யப்படும் என்சைம்கள், உலகின் பிளாஸ்டிக் மாசு நெருக்கடியைச் சமாளிக்க உதவும் என்றும் அவர் நம்புகிறார்.

பெர்டோச்சினி இப்போது பிரான்சில் உள்ள பயோரிசர்ச் ஸ்டார்ட்அப் பிளாஸ்டிசென்ட்ரோபியில் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக உள்ளார். பிளாஸ்டிக்கை உடைப்பதில் இந்த நொதிகளைப் பரவலாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

"இந்த நொதிகளை பிளாஸ்டிக் கழிவுகளில் பயன்படுத்துவதே இறுதி குறிக்கோள்" என்கிறார் பெர்டோச்சினி. "இந்தக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு உலகளவில் நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு தீர்வாக மாற்றப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.

பயன்தரக்கூடிய என்சைம்கள் பல்வேறு உயிரினங்களில் காணப்படுகின்றன. சில பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் பிளாஸ்டிக்கை ஜீரணிக்கின்றன. ஆனால் உயர் விலங்கினங்களில் இது மிகவும் அரிதானது.

கடந்த 2022ஆம் ஆண்டில், பிளாஸ்டிக்கை விரும்பி உண்ணும் மற்றொரு முதுகெலும்பில்லாத உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது. அதுதான் "சூப்பர் வார்ம்" ஜூபோபாஸ் மோரியோ. இது பாலிஸ்டிரீன் கொண்ட உணவு மூலம் தனது எடையை அதிகரித்துக் கொள்கிறது.

பிளாஸ்டிக் மீதான நமது நம்பிக்கையையும், நுகர்வையும் குறைக்கப் பல உலகளாவிய நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இந்த இலக்கிற்காக, பல நாடுகளும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் குறைக்க முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளன.

மேலும் 2024இன் பிற்பகுதியில் உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்தம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இறுதியில் இதுபோன்ற நொதிகள், பிளாஸ்டிக்கை குறைக்கப் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டால், அதில் இந்தச் சிறிய புழுக்களின் பங்கும் இருக்கலாம்.

பிளாஸ்டிக் முழுவதுமாக சிதைவதற்குப் பல தசாப்தங்கள் முதல் நூற்றாண்டுகள் வரை ஆகும்.

இன்று உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 400 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன.

அதில் 19 முதல் 23 மில்லியன் டன்கள் (சுமார் 2,000 குப்பை லாரிகளுக்குச் சமமானவை) நீர்வாழ் உயிரின சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குள் செல்கின்றன.

அதில் பெரும்பாலானவை நுண்ணுயிர்களின் இருப்பிடமாக மாறுகின்றன அல்லது விலங்குகளால் உண்ணப்படுகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *