RM 1.35மில்லியன் மதிப்பிலான கடத்தல் தேங்காய்கள் பறிமுதல்!

top-news

மே 14,

உள்ளூர் தேங்காய்களைப் பதுக்கி சட்டவிலோதமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவு தெரிவித்துள்ளது. சுமார் 45,100 கிலோ எடையிலான உள்ளூர் தேங்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

 கிளாந்தானில் உள்ள TUMPAT பகுதியில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு மேற்கொண்ட சோதனையில் 2 லாரிகளையும் 1 Treler லாரியையும் பறிமுதல் செய்ததுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 45,100 கிலோ தேங்காய்களின் மதிப்பு RM 1.35 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவர் உள்ளூர் ஆடவர்கள் என்றும் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sebanyak 45,100 kilogram kelapa tempatan bernilai RM1.35 juta berjaya dirampas dalam cubaan penyeludupan ke luar negara di Tumpat, Kelantan. Tiga lelaki tempatan ditahan bersama dua lori dan satu treler dalam operasi tengah malam oleh pihak berkuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *