லாரியின் பின் மோதிய மற்றொரு லாரி! இருவர் படுகாயம்!

top-news

மே 22,

கட்டுப்பாட்டை இழந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு லாரியின் பின் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்தனர். பிற்பகல் 3.39 மணிக்கு உலு திராமில் உள்ள Jalan Ban Foo சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக Ulu Tiram மாவட்ட மீட்பு ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். பின்னிருந்து மோதிய லாரியின் ஓட்டுநரும் அவைரின் உதவியாளரும் படுகாயம் அடைந்த நிலையில் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநரும் அவரின் உதவியாளரும் இரு லாரிகளுக்கிடையில் சிக்கியிருந்ததாகவும் சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் அவர்கள் இருவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநரும் அவரின் உதவியாளரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையை மேற்கொள்வதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Sebuah lori hilang kawalan lalu merempuh lori yang sedang berhenti di Jalan Ban Foo, Ulu Tiram. Pemandu dan pembantunya cedera parah selepas tersepit antara dua lori selama tiga jam sebelum berjaya diselamatkan dan dihantar ke hospital untuk rawatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *