விபத்தில் இளைஞர் பலி! லாரி ஓட்டுநர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 14 May, 2025
மே 14,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் வந்த லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் 26 வயது வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று காலை 8.49 மணிக்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் பாகே அருகில் இந்த விபத்து ஏற்பட்டதாக Pagoh மாவட்ட மீட்பு ஆணையர் Mohd Hafiz Shahid தெரிவித்தார்.
விபத்தில் 3 டன் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்ததாகவும் வாகனத்தினுள் சிக்கியிருந்த 26 வயதூ இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியாகிய நிலையில் 41 வயது லாரி ஓட்டுநர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக Pagoh மாவட்ட மீட்பு ஆணையர் Mohd Hafiz Shahid தெரிவித்தார். விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல்துறை விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *