10 மீட்டர் உயரத்திலிருந்து கடலில் கவிழ்ந்த கார்! இளம்பெண் படுகாயம்!

top-news

மே 14,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து விலகி 10 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்து கடற்கரையில் கவிழ்ந்ததாக Langkawi, மாவட்டக் காவல் ஆணையர் Shariman Ashari தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து காலை 11.35 மணிக்குப் பொதுமக்களிடம் தகவல் கிடைத்ததும் மீட்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Shariman Ashari தெரிவித்தார். விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனமோட்டியைப் பொதுமக்கள் வாகனத்திலிருந்து மீட்டதாகத் தெரிய வந்துள்ளது.

லங்காவியில் உள்ள Jalan Teluk Yu எனும் கடற்கரையை ஒட்டிய சாலையில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் 22 வயது இளம் பெண் என்றும் தங்கும் விடுதியில் கணக்காய்வாளராகப் பணியாற்றும் பெண் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளத. படுகாயம் அடைந்த பெண் Sultanah Maliha மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையை மேற்கொள்வதாகவும் Langkawi, மாவட்டக் காவல் ஆணையர் Shariman Ashari தெரிவித்தார்.

Sebuah kereta hilang kawalan dan terjatuh ke tepi pantai dari ketinggian 10 meter di Langkawi. Seorang wanita muda berusia 22 tahun mengalami kecederaan parah dan kini dirawat di Hospital Sultanah Maliha.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *