சிங்கப்பூர் பொது போட்டியிலிருந்து லீ ஜி ஜியா விலகினார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 30-
 2024 தாய்லாந்து பொது போட்டியிலும்  2024 மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியிலும் பங்கேற்ற பின்னர், தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக 2024 சிங்கப்பூர் பொது போட்டியிலிருந்து தேசிய ஆண்கள் ஒற்றையர் தொழில்முறை வீரர் லீ ஜி ஜியா விலகியுள்ளார்.
அவர் போட்டியிலிருந்து வெளியேறியது நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில்  ஜி ஜியாவை எதிர்கொள்ள இருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த நடப்புச் சாம்பியனான அந்தோணி சினிசுகா ஜின்டிங்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
 ஏனெனில், இன்று நடைபெறும் இரண்டாவது சுற்றுக்கு இலவசமாக முன்னேறும் வாய்ப்பு அந்தோணிக்கு கிடைத்துள்ளது.
அவர் இவ்வாட்டத்தில் மற்றொரு தேசிய ஆடவர் ஒற்றையர் வீரரான லியோங்கைச் சந்திக்கவுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெறும் சூப்பர் 750 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க வேண்டாம் என்று மருத்துவ ஆலோசனையைப் பெற்ற பிறகு, உடல் நலத்தில் கவனம் செலுத்துவதற்காக இந்தக் கடினமான முடிவு எடுக்கப்பட்டதாக நேற்று அவரின் அணியினர் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.
தாய்லாந்து பொது போட்டி மே 14 முதல் 19ஆம் தேதிகளிலும், மலேசிய மாஸ்டர்ஸ் போட்டி மே 21 முதல் 26ஆம் தேதி  வரையிலும், நேற்று முன்தினம் (மே 28) தொடங்கிய சிங்கப்பூர் பொது போட்டி  ஜூன் 2 வரையிலும் நடைபெறும்.
இதற்கிடையில், தேசிய கலப்பு இரட்டையர் கோஹ் சூன் ஹுவாட்-ஷெவோன் லாய் ஜெமி 33 நிமிடங்களில் இந்தியாவின் பி.சுமீத் ரெட்டி-சிக்கி ரெட்டியை 21-18,  21-19 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.
அதோடு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 26) புதிதாக முடிசூட்டப்பட்ட மலேசியன் மாஸ்டர்ஸ் 2024 வெற்றியாளர்கள்  இன்று இரண்டாவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான சீனாவின் ஜெங் சி வெய்-ஹுவாங் யா கியோங்கை சந்திக்கின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *