கேளிக்கை மையத்தில் கைகலப்பில் ஈடுபட்ட ஐவர் கைது!

- Sangeetha K Loganathan
- 15 May, 2025
மே 15,
மலாக்காவில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தின் வாசலில் ஆடவர் ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கியதாக நம்பப்படும் ஐவரைக் காவல்துறையினர் கைது செய்து இன்று Ayer Keroh Majistret நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் தங்கள் மீதானக் குற்றத்தை மறுத்து ஐவரும் நீதிமன்ற விசாரணையைக் கோரியது ஜாமின் மனுவையும் தாக்கல் செய்தனர். கடந்த மே 7 அதிகாலை 2.15 மணிக்கு மலாக்காவில் உள்ள Jalan Syed Abdul Aziz பகுதியில் உள்ள கேளிக்கை மையத்தின் வாசலில் 33 வயதான Randy Tan Kuan Chye எனும் ஆடவரைத் தாக்கியதாக ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 27 வயது Lai Jing Ho, 42 வயது Lim Koon Leng, 30 வயது Yee Pao Wei, 23 வயது Bong Jia Jun, 40 வயது Kevin Fong Tze Weng எனும் ஐவருக்கும் தலா RM5,000 உடன் நிபந்தனை ஜாமின் வழங்குவதாகவும் இருவர் உத்தரவாதத்துடன் இந்த ஜாமின் வழங்குவதாக Ayer Keroh Majistret நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலதிகமாக சம்மந்தப்பட்ட ஐவரும் மாநிலத்தை விட்டு வெளியேற அனுமதியில்லை என்றும் எதிர்வரும் ஜூன் 23 மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் Ayer Keroh Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Lima lelaki ditahan kerana disyaki menyerang seorang lelaki dengan besi di luar pusat hiburan di Melaka. Mereka mengaku tidak bersalah dan mohon dibicarakan. Mahkamah menetapkan jaminan RM5,000 setiap seorang serta larangan keluar dari negeri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *