நின்று கொண்டிருந்த வாகனத்தை லாரி மோதியதில் ஆடவர் பலி!

top-news

மே 15,

சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த வாகனத்தை லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியதில் ஆடவர் ஒருவர் உயிரிழந்ததுடன் லாரி ஓட்டுநரும் அவரின் உதவியாளரும் படுகாயம் அடைந்தனர். இவ்விபத்து இன்று காலை 8.45 மணிக்கு வடக்கு தெற்கு நெடுஞ்சிலையின் YONG PENG அருகில் நிகழ்ந்ததாக BATU PAHAT மாவட்டக் காவல் ஆணையர் SHAHRULANUAR MUSHADDAT தெரிவித்தார். 

பழுதடைந்த PERODUA VIVA வாகனத்தைச் சாலையோரம் நிறுத்தி வைத்து பழுதைச் சரிபார்க்கும் போது பின்னிருந்து வந்த லாரி வாகனத்தை மோதியதாகவும் AHMAD ZUHAIRI எனும் 41 வயது வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 26 வயது லாரி ஓட்டுநரும் அவரின் உதவியாளரும் படுகாயம் அடைந்திருப்பதாகவும் BATU PAHAT மாவட்டக் காவல் ஆணையர் SHAHRULANUAR MUSHADDAT தெரிவித்தார்.

Seorang lelaki maut apabila kereta yang berhenti di tepi jalan akibat kerosakan dirempuh sebuah lori di Yong Peng. Mangsa, Ahmad Zuhairi, 41, meninggal di tempat kejadian, manakala pemandu lori dan pembantunya cedera.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *