பகாங்கில் 45 ஆசிரியர்கள் RM 1.2மில்லியன் இழந்துள்ளனர்! - SCAM REPORT

top-news
FREE WEBSITE AD

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையில் பகாங் மாநிலத்தில் மட்டும் 45 ஆசிரியர்கள் Macau Scam எனப்படும் முதலீட்டு மோசடிகளில் தங்கள் சேமிப்பை இழந்துள்ளதாக Pahang மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களைக் குறி வைத்து முதலீடுகள் தொடர்பான மோசடிகள் நடத்தப்படுவதாகவும், இளம் ஆசிரியர்களிடம் தொலைப்பேசியின் மூலம் மிரட்டியும், பாதுகாப்புகள் குறித்தான மிரட்டல்களை விடுத்தும் பணம் பறிப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 6 மாதங்களில் 61 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதன் விசாரணை அனைத்திலும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் சிக்கியதன் பின்னணிகள் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்,

காவல்துறையும் பாதுகாப்புத் துறையினரிடமிருந்து அழைப்பு வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறையில் தகவலைத் தெரிவிக்கும்படி Pahang மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Seri Yahaya Othman வலியுறுத்தினார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *