மலாயா டைகர்ஸ் சாம்பியன்ஷிப்

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், மே 23-
மலாயாப் பல்கலைக்கழகத்தில் கபடி கழகம், தமிழ் வேங்கைகள் கால்பந்து அணியினர் இணைந்து மலாயா டைகர்ஸ் சாம்பியன்ஷிப் எனும் போட்டியை மே 17ஆம் தேதி ஏற்று நடத்தினர். 
மலாயாப் பல்கலைக்கழகக் கபடி கழகத்தின் மாபெரும் முன்னெடுப்பான இந்தப் போட்டியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி, கால்பந்து போட்டிகள் இடம்பெற்றன. 
இக்கழகத்தின் ஆலோசகரும் மொழி, மொழியியல் புலத்தின் முதுநிலை விரிவுரையாளருமான முனைவர் செல்வஜோதி இராமலிங்கமும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய முன்னாள் மாணவர் சங்கத் துணைத் தலைவர் விக்ரம் சண்முகமும்  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கபடி ஆண்கள் பிரிவில் 9 குழுக்களும், பெண்கள் பிரிவில் 8 குழுக்களும், 12 கால்பந்து அணியினரும் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 
12 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்ட இப்போட்டியில்,  யுடிஎம் ஒட்டுமொத்த வெற்றியாளராக தேர்வு பெற்றனர். 
வெற்றி பெற்ற அணியினருக்கு நற்சான்றிதழ், வெற்றி கோப்பை மட்டுமின்றி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
மேலும், பல தடைகளைக் கடந்து பலரின் கூட்டு முயற்சியால் புதிதாக மலர்ந்த இந்த மலாயா டைகர்ஸ் சாம்பியன்ஷிப் சிறப்பாக நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர்கள் சீவகன் விஜயேந்திரன், நோவேஷ்குமார் செல்வகுமாரன் தங்களின் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *