பினாங்கில் சுகாதாரமற்ற NASI KANDAR உணவகங்களில் MBSP சோதனை!

top-news

மே 16,

பினாங்கில் இயங்கி வரும் NASI KANDAR உணவகங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகப் பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரின் அடிப்படையில் Seberang Perai நகராண்மைக் கழகம் (MBSP) 4 உணவகங்களில் சோதனையை மேற்கொண்டது. சம்மந்தப்பட்ட 4 உணவகங்களும் முறையாகப் பராமரிக்கப்படாமல் சுகாதாரமற்ற முறையில் உணவுகளைத் தயாரிப்பதை சோதனையில் உறுதிச் செய்யப்பட்டதும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என Seberang Perai நகராண்மைக் கழகம் (MBSP) தெரிவித்துள்ளது.

முறையான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர்களைப் பணிக்கு அமர்த்தியது, சுகாதாரமற்ற நிலையில் உணவுகளைத் தயாரித்தல், பொது இடங்களை ஆக்கிரமித்தல், காலாவதியான உணவுப் பொட்டலங்களைக் கொண்டிருநத்தல் என பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் இந்த 4 உணவகங்களும் மூடப்படுவதாகவும் சம்மந்தப்பட்ட உணவகங்களின் உரிமையாளர்களுக்குச் சம்மன் வழங்கப்பட்டதுடன் விசாரணைக்காக நேரில் வரும்படியும் Seberang Perai நகராண்மைக் கழகம் (MBSP) உத்தரவிட்டுள்ளது.

MBSP menjalankan pemeriksaan terhadap empat restoran nasi kandar di Pulau Pinang selepas menerima aduan awam. Restoran-restoran tersebut didapati beroperasi dalam keadaan tidak bersih dan telah diarahkan tutup sementara serta pemiliknya disaman untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *