முகைதீனின் RM232.5 மில்லியன் பணமோசடி வழக்கு! உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

top-news

மே 14,


முன்னாள் பிரதமரும் பெர்சத்து கட்சியின் தலைவருமான Tan Sri Muhyiddin Yassin மீதான RM232.5 மில்லியன் பணமோசடி ஊழல் வழக்கை Sesyen நீதிமன்றத்திலிருந்து உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதற்கானக் கோரிக்கையை முகைதீனின் வழக்கறிஞர் Tang Jia Wearn இன்று உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். முகைதீனின் கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம் கோரிக்கைகான விசாரணையை ஜுன் 16 ஆம் திகதி நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tan Sri Muhyiddin Yassin பிரதமராக இருந்த போது அரசு நிதியை Bukhary Equity Sdn Bhd, Nepturis Sdn Bhd, Mamfor Sdn Bhd ஆகிய 3 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதாகவும், அரசு நிதி பகிர்ந்தளிப்பின் போது RM232.5 மில்லியன் தொகை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. முன்னதாக இந்த வழக்கு Sesyen நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில் அரசு உயரிய பொறுப்பாளர்கள் தொடர்புடைய வழக்கு என்பதால் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதற்கானக் கோரிக்கை தற்போது வழங்கப்பட்டுள்ளது.

Kes rasuah RM232.5 juta melibatkan bekas Perdana Menteri Tan Sri Muhyiddin Yassin dipohon dipindahkan dari Mahkamah Sesyen ke Mahkamah Tinggi. Mahkamah Tinggi akan mendengar permohonan ini pada 16 Jun depan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *