தெலுக் இந்தான் விபத்தில் காயமுற்ற ஒருவர் இன்று டிஸ்ஸார்ஜ்- எழுவர் இன்னும் மருத்துவமனையில்!

- Muthu Kumar
- 15 May, 2025
ஈப்போ, மே 15:
தெலூக் இந்தானில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கோர விபத்தில் காயமடைந்த FRU போலீஸ் சிறப்புப் படை பணியாளர் ஒருவர் நேற்று இரவு தெலுக் இந்தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அனிக் தௌஃபிக் ரோஸி எனும் அந்த நபர் இரவு 9.30 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் பெர்லிஸின் ஆராவில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக ஹிலிர் பேராக் காவல்துறைத் தலைவர் பக்ரி ஜைனல் அபிடின் தெரிவித்தார்.
தற்போது, பாதிக்கப்பட்ட ஏழு பேர் இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆறு பேர் தெலுக் இந்தான் மருத்துவமனையிலும், ஒருவர் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளனர்.
Seorang anggota polis FRU yang cedera dalam kemalangan di Teluk Intan telah dibenarkan keluar hospital malam tadi. Tujuh mangsa lain masih menerima rawatan di dua hospital berbeza.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *